For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜி 8 மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் மன்மோகன் சிங்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை தொடங்கும் ஜி 8 மாநாட்டில்பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கனடா, பிரான்ஸ்ஆகிய பணக்கார நாடுகள் இடம் பெற்றுள்ள கூட்டமைப்பான ஜி 8 அமைப்பின்மாநாடு பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது.

இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளுமாறு இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்டநாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர்மன்மோகன் சிங் இன்று ரஷ்யா கிளம்பிச் சென்றார்.

அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர்வழியனுப்பி வைத்தனர். கிளம்பும் முன் மன்மோகன் சிங் ஒரு அறிக்கையைவாசித்தார்.

அதில், அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு எதிராக உலக சமுதாயம் ஒருங்கிணைந்துசெயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜி 8 தலைவர்களிடம் இந்தியா சார்பில்வலியுறுத்தவுள்ளேன்.

தீவிரவாதம் எங்கிருந்தாலும், தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்களுக்குஎதிராக உலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை வளர்ந்தநாடுகளின் தலைவர்களிடம் தெரிவிக்கவுள்ளேன்.

தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்படவேண்டும். வேரோடு அழிக்கப்பட வேண்டும். தீவிரவாதக் குழுக்களுக்கு எந்த நாடும்அடைக்கலம் தரக் கூடாது, அவர்களை ஆதரிக்கவும் கூடாது.

தீவிரவாதத்திற்கு எதிராக கொஞ்சம் கூட சகிப்புத் தன்மையை கையாளக் கூடாது என்றுஜி 8 தலைவர்களிடம் வலியுறுத்தப் போகிறேன்.

உலகின் பல்வேறு பகுதிகளையும் தீவிரவாதம் கடுமையாக பாதித்து வருகிறது.ஏராளமான மனித உயிர்கள் தீவிரவாத்திற்குப் பலியாவது தொடர் கதையாகிவருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீநகர் மற்றும் மும்பையில் நடந்த தொடர்குண்டுவெடிப்புச் சம்பவங்கள்.

தீவிரவாதம் தவிர உலக வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதரமயமாக்கம் ஆகியவைகுறித்து ஜி 8 மாநாட்டில் வளரும் நாடுகளின் கருத்துக்களையும் தெரிவிக்க வாய்ப்புஅளிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சீன அதிபர் ஹூ ஜின் டாவோ,பிரேசில் அதிபர் லூயிஸ் இனேசியோ டா சில்வா, ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலாமெர்கல், ஜப்பான் பிரதமர் கொய்சூமி ஆகியோரை சந்திக்க மிகவும் ஆர்வமாகஉள்ளேன்.

இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இவர்களுடன்விவாதிக்க திட்டமிட்டுள்ளேன்.

ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடன் முதலாவது முத்தரப்பு மாநாடும் இந்தபயணத்தின்போது பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது.

அக்கூட்டத்தையும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.

ஜி 8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, பிரேசில், சீனா, மெக்ஸிகோ,தென் ஆப்பிரிக்கா, காங்கோ, கஸகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விடுத்தஅழைப்பு பாராட்டுக்குரியது.

இந்த மாநாட்டில் கல்வி, பாதுகாப்பு, தொற்று நோய் பரவல் தடுப்பு ஆகியவற்றுக்குமுக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படவுள்ளது என்றார் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X