For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 தமிழர்கள் உடல்கள் சென்னை வந்தன: கதறிய உறவினர்கள்-அமைச்சர்கள் அஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பஹ்ரைன் தீ விபத்தில் உயிரிழந்த 16 தமிழர்களின் உடல்களும் இன்று தனி விமானம்மூலம் சென்னை வந்தடைந்தன. உடல்களைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் கதறிஅழுதது விமான நிலையத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. உடல்களுக்குமாநில, மத்திய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த பெரும் தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த் 16தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் இன்று காலை கல்ப் ஏர்சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.

விமான நிலையத்தில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி, அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கேபன்னீர்செல்வம், அன்பரசன் ஆகியோர் உடல்களை பெற்றுக் கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

பலியானவர்களின் உறவினர்களும் விமான நிலையத்தில் கதறியழுதவண்ணம் உடல்களை வாங்கிக் கொண்டனர்.உடல்களைப் பெறும்போது உறவினர்கள் கதறி அழுதது, விமான நிலையத்தையேபெரும் சோகக் கடலில் மூழ்கடித்தது.

கஸ்டம்ஸ் சம்பிரதாயங்களுக்குப் பின்னர் அந்த உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவரவரின் சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆம்புலன்ஸ்களுடன் போலீஸ் வாகனங்களும் உடன் சென்றன.

பலியானவர்களில் 7 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் 5 பேர்பெரம்பலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

ரியாத் தமிழர் உடல் வருமா?:

இதற்கிடையே கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் ரியாத்தில் மரணடைந்த தமிழரின் உடலை கொண்டு வர உரியநடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.

செளதியில் பணியாற்றி வந்த பண்ருட்டியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பலியாகி இத்தனை நாட்களாகியுள்ளஅவரது உடல் வந்து சேரவில்லை. இது குறித்து பாமக எம்எல்ஏ வேல்முருகன் சட்டமன்றத்தில் கேள்விஎழுப்பினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி, உடலை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X