• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையில் நார்வே தூதர்-நாளை வன்னி பயணம்

By Staff
|

கொழும்பு:

இலங்கையில் மோதல் தீவிரமடைந்து முழுமையான போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நார்வேஅமைதித் தூதர் ஜோன் ஹென்ஸ்சென் பேயர் இன்று கொழும்பு வந்துள்ளார்.

Bauer
இன்று பிரதமர் விக்கிரமநாயகே, வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீரா, அரசின் அமைதிச் செயலகத்தின்தலைவர் பலிதா கொஹோனா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார் ஜோன்.

திரிகோணமலையில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக்கொண்டு வருவது மற்றும் அமைதிக் கண்காணிப்புக் குழுவில் இருந்து ஐரோப்பிய நாடுகளின்பார்வையாளர்களை விலகச் செய்வது ஆகியவை குறித்து ஜோன் பேசுவார்.

அதிபர் ராஜபக்ஷேவை ஜோன் சந்திப்பாரா என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனை ஜோன் சந்திக்கவுள்ளதாகபுலிகளின் செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

நாளை வன்னிக்கு வரும் ஜோன் இரு நாட்கள் கிளிநொச்சியில் தங்கியிருந்து தமிழ்ச்செல்வனுடன் பேசவுள்ளார்.பிரபாகரனையும் சந்திக்க ஜோன் நேரம் ஒதுக்கக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே முட்டூரில் நேற்று அரபிக் கல்லூரி மீது விழுந்த ஆர்ட்டிலரி குண்டை வீசியது இலங்கை ராணுவம்தான் என்று புலிகள் கூறியுள்ளனர். இந்த குண்டு வெடித்ததில் 12 பேர் பலியாயினர். இத் தாக்குதலை புலிகள்நடத்தியதாக ராணுவம் கூறியது. ஆனால், ராணுவம் நடத்திய தாக்குதல் அது என புலிகள் கூறியுள்ளனர்.

முட்டூரில் கடந்த இரு நாட்களில் 26 பொது மக்கள் பலியாகிவிட்ட நிலையில் ஏராளமானோர்காயமடைந்துள்ளனர். இதையடுத்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யஉதவுமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவத்துடனான மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்க, தாங்களும் ஒத்துழைக்கத் தயார் எனசெஞ்சிலுவை சங்கத்துக்கும் தன்னார்வ அமைப்புகளிடமும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதே போல தங்களுடனான மோதலில் பலியான 40 ராணுவ வீரர்களின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கம்மூலம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் புலிகள் கூறியுள்ளனர். முட்டூர் பகுதியில் நேற்று மட்டும் 12ராணுவ வீரர்கள் பலியாகியதாக புலிகள் கூறுகின்றனர். இதை ராணுவம் மறுத்துள்ளது. 11 புலிகள் தான்பலியானதாக ராணுவம் கூறுகிறது.

முட்டூர் பகுதியில் ஸ்பெஷல் கமாண்டர் சொர்ணம், திரிகோணமலை கமாண்டர் அறிவு ஆகியோர் தாக்குதல்களைமுன்னின்று நடத்தி வருதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே இலங்கையின் பிரபலமான தமிழ் இலக்கியவாதியான பொன்.கணேசமூர்த்தி (56) இன்று காலையாழ்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் பீயூப்பிள்ஸ் வங்கியின் பொது மேலாளராக இருந்தகணேசமூர்த்தியை இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவினர் தான் சுட்டுக் கொன்றதாக புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே இன்று திரிகோணமலையில் ராணுவ முகாமின் மீது இன்று பீரங்கிகள் மூலம் புலிகள் தாக்குதல்நடத்தி வருகின்றனர். வவுனியா மற்றும் மட்டக்களப்பிலும் ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். ராணுவத் தரப்புடன் கருணா கும்பலும் சேர்ந்து புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

திரிகோணமலையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்துவருகின்றனர். அவர் ராணுவ செக்போஸ்ட் அருகே குவிந்து வருவதாகவும், எங்கே போவது என்று தெரியாமல்திணறி வருவதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X