For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸிலிருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாதக் கமிஷன் அறிக்கைமுன் கூட்டியே வெளியான விவகாரத்தில் பிரதமர்மன்மோகன் சிங் மீது நாடாளுமன்றத்தில உரிமை மீறல் பிரச்சினை எழுப்பியமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்துசஸ்பெண்ட் செய்யப்படடுளளார்.

ஈராக் எண்ணை ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பாதக்கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பேவெளியானது. இதில் நட்வர் சிங்கின் மகனின் நண்பர்கள் பண லாபம் அடைந்ததுஉண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறிக்கைமுன் கூட்டியே வெளியானதால் ஆத்திரமடைந்த நட்வர் சிங், பிரதமருக்குஎதிராக ராஜ்யசபாவில் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார்.

இது காங்கிரஸ்கட்சிக்கு கடும் அதிர்ச்சியைக்கொடுத்தது. மேலும் நட்வருக்குஆதரவாக பாஜக, அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்தன.

கட்சியின் பெயருக்கும், பிரமதருக்கும் களங்கம் ஏற்படுததும் வகையில் நட்வர் சிங்நடந்து கொண்டதாகக் கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் ஒழுங்குநடவடிக்கைக் குழு அதன் தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் கூடி,

நட்வர் சிங்கை கட்சியின் அடிப்படை உறுபபினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்துசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

மேலும் நட்வர் சிங்க்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்காக மன்மோகன்:

தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து நட்வர் சிங் அளித்த பேட்டியில்,

லோக்சபா தேர்தலையே சந்திக்காத முதல் பிரதமர் மன்மோகன் சிங் தான். அவர் கவுன்சிலர் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை.இது ஒரு கின்னஸ் சாதனை. அவர் ஒரு நியமன பிரதமர்தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள 3 அமைச்சர்கள் மீது கொலை, கற்பழிப்பு வழக்குள் உள்ளன.

நீதிபதி பாதக் கமிட்டி அறிக்கை பிரதமர் அலுவலகத்திலிருந்து தான் கசிந்துள்ளது. இது மாபெரும் தவறு. காங்கிரசிலிருந்துஎன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி யார்?. இந்திரா காந்திக்குப் பின்பிரதமாக ஆசைப்பட்டவர் தானே. ராஜிவ் காந்தியால் காங்கிரசிலிருந்து 6 வருடம் நீக்கி வைக்கப்பட்டவர் தானே.

மிகப்புனிதமான ரக்ஷாபந்தன் தினத்தன்று காங்கிரசிலிருந்து நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். கேடு வரும் காலத்தில்கெட்ட புத்தி வரும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. நான் இதை சந்திக்க ரெடி என்றார் நட்வர்.

இந் நிலையில் நட்வரை சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங், ஐக்கிய ஜனதா தள தலைவர் திக் விஜய் சிங்,பாஜக தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவரை கட்சியில் சேருமாறுசமாஜ்வாடிக் கட்சி கோரி வருகிறது.

சோனியாவை பாதுகாக்க...பாஜக:

இராக் எண்ணெய்க்கு உணவு திட்ட ஊழலில் தொடர்புள்ள காங்கிரஸ் மற்றும் சோனியா காந்தியை காப்பாற்றவே நட்வர் சிங் பலிகடாஆக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

சோனியாவுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் யாரையாவது பலிகடா ஆக்கும் காங்கிரஸ் கலாச்சாரம் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது என பாஜகசெய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X