கிரக அந்தஸ்தை இழந்தது புளூட்டோ!:இனி சூரிய குடும்பத்தில் 8 கோள்களே!!

Subscribe to Oneindia Tamil

பராகுவே:

புளூட்டோவுக்கு வழங்கப்பட்ட கிரகம் என்ற அந்தஸ்தை சர்வதேச வானியல்நிபுணர்கள் மாநாடு ரத்து செய்துள்ளது. இதனால் சூரிய குடும்பத்தின் கோள்களின்எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.

Real image of Pluto and its moon Charon

இனிமேல் அது சிறிய கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

பராகுவேயில், நடந்க சர்வேதச வானியல் நிபுணர்கள் மாநாட்டில் இந்த நூற்றாண்டின்மிக பரபரப்பான, மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உலகெங்கும் இருந்தும் 75 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வானியல் ஆராய்ச்சிகள்சுமார் 2,500 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் புளூட்டோ கிரகம் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக்கிரகம் கடந்த 1930ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கபபட்டது. அன்றுமுதலே இந்தகிரகம் சர்ச்சையில் இருந்து வருகிறது.

Solar system

புளூட்டோ கிராகத்தின் பாதை நெப்ட்யூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால்,புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது என்று கருத்து நிலவி வந்தது.

மேலும் புளூட்டோவின் அளவு மிக மிக சிறியதாக இருப்பதால், இதை வானில் சுற்றிவரும் ஹப்பிள் டெலஸ்க்கோப்பே மிகவும் சிரமப்பட்டே படம் எடுக்க முடிகிறது.

கிரகத்துக்கே உரிய தனி வட்டப் பாதையில் அல்லாமல்

நெப்ட்யூன் கிரக வளையத்திகுள் புளூட்டோ வருவதால், தானாகவே அது தனி கிரகம்என்ற அந்தஸ்தை இழந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புளூட்டோ இனிமேல் சிறிய கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்படும்.

இதையடுத்து புளூட்டோ இனிமேல் கிரகம் என அழைக்கப்படமாட்டாது. மேலும்,நவக் கிரகம் என்ற நிலை மாறி இனிமேல் மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ், ஜூபிடர்,சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய 8 கிரகங்கள் மட்டுமே சூர்ய குடும்பம் எனஅழைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+