• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்குன் குனியா: இலவச சிகிச்சைக்கு தேமுதிக டாக்டர்கள் குழு!

By Staff
|

சென்னை:

சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேமுதிக சார்பில் டாக்டர்கள் குழுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆறுமாதமாக சிக்குன் குனியா தமிழக மக்களை குறிப்பாக சென்னை மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இந்தநோய் பற்றி பேசாத வாயே இல்லை. குடும்பம் குடும்பமாக இந்த நோய் பாதித்து வருகிறது.

பகல் நேர கொசுக்கள் தான் இந்த நோயை பரப்புகின்றன. இதனால் 105 டிகிரி வரை காய்ச்சல் அடிக்கிறது.மூட்டுக்களை முடக்கி விடுகிறது. தலைவலி, கை, கால் நடுக்கம், வாந்தி, மயக்கம், ரத்த அழுத்த குறைவு, மூட்டுவீக்கம், குளிர், தூக்கமின்மை என ஆளையே முடக்கிப் போட்டு விடுகிறது.

காய்ச்சல் சரியானாலும் கூட மூட்டு வலி, உடல் அசதி போக குறைந்தது 1 வாரம் முதல் 1 மாதம் வரை ஆகிறது.வயதானவர்கள், சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு முழுமையாக குணமாக சில மாதம் பிடிக்கிறது.

இப்படி ஒரு காய்ச்சல் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று எண்ணும் அளவுக்கு மிகக் கொடுமையான நோயாகஉள்ளது சிக்குன் குனியா. 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற மருத்துவர்களுக்கும், புரியாத புதிராய்புதிதாய் புறப்பட்டுள்ள புல்லட் காய்ச்சல் இது. காலையில் நோயாளிக்குத் துணையாக வருவோர் மாலையில்நோயால் அணைக்கப்பட்டு சிக்கித் தவிப்பது தினசரி காட்சியாகி விட்டது.

இந்த நோயை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? நோயில் பாதித்தவர்களின்எண்ணிக்கையைக் கூட இந்த அரசு முறையாக சொல்லவில்லை. மரணமே இதனால் ஏற்படவில்லை என்றுதவறான தகவல்களை வெளியிடுவது கவலைக்குரியது.

சிக்குன் குனியா என்ற கொள்ளை நோய் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவேண்டும்.

இந்த நோய் குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்கவும், இலவச சேவைகளுக்கும், தேமுதிக மருத்துவர் அணிதயாராக உள்ளது. பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மருத்துவர்கள், அவர்களது தொலைபேசி எண்கள்இதோ:

சென்னை - டாக்டர் நாபாரி - 0382702223

கோவை -டாக்டர் டென்னிஸ் கோவில் பிள்ளை -9366631399

வேலூர் - டாக்டர் கந்தப்பன் - 9443132734

சேலம் - டாக்டர் ஈஸ்வரன் - 9367166999

கிருஷ்ணகிரி - டாக்டர் ஜான் - 9443325049

தர்மபுரி - டாக்டர் இளங்கோவன் - 9443281097

ஈரோடு - டாக்டர் பர்வேஷ் - 9842720212

திண்டுக்கல் - டாக்டர் தங்கவேல் - 9443031662

ஓராண்டை முடித்தது தேமுதிக:

இதற்கிடையே தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த பின்னர் நடந்த முதலாவது சட்டசபைத் தேர்தலில்234 தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

கட்சியின் முதலாமாண்டு விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு நலத் திட்டஉதவிகளை வழங்கினார்.

3 ஆதரவற்றோர் சங்கங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம், சீருடைகளை அவர் வழங்கினார். மொத்தம் ரூ. 25 லட்சம்கல்வி உதவித் தொகையை வழங்கிய அவர் கட்சியின் தொழிற்சங்க பேரவை அலுவலக கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கட்சியின் முதலாமாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் வரும் 17ம் தேதி நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் விஜயகாந்த்கலந்துகொண்டு பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X