For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை இடைத்தேர்தல்-களமிறங்குகிறார் சசிகலா?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின்மனைவி ருக்மணி போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் திடீர்மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 11ம் தேதி நடைபெறும்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

திமுக சார்பில் பி.டி.ஆரின் மனைவி ருக்மணி நிற்கக் கூடும் என கூறப்படுகிறது.அதேசமயம், மேயர் செ.ராமச்சந்திரன், துணை மேயர் கவுஸ் பாட்ஷா, நகர திமுகசெயலாளர் வேலுச்சாமி ஆகியோரின் சீட் கேட்டு அழகிரியை அனத்தி வருகின்றனர்.

அதேபோல அதிமுக தரப்பில் ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டஎஸ்.டி.கே. ஜக்கையனுக்கே மீண்டும் வாய்பபு கிடைக்கும் என அவரதுஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நகர செயலாளர் ராஜன்செல்லப்பா உள்ளிட்ட சிலரும் சசிகலா குடும்பத்தின் ஆதகவுடன் டிக்கெட் பெறமுயன்று வருகின்றனர்.

ஆனால் இந்தத் தேர்தல் மூலம் திமுகவுக்கு முதல் தோல்வியை தரும் தீவிரத்தில்ஜெயலலிதா உள்ளார். இதை கெளரவப் பிரச்சினையான கருதும் அவர் வலுவானவேட்பாளரை நிறுத்தும் முடிவில் இருக்கிறார்.

கடந்த தேர்தலின்போது இங்கு காளிமுத்துதான் முதலில் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார். ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்ஜக்கையன் வேட்பாளரானார்.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், காளிமுத்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவேஅவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே சசிகலாவையே களத்தில் இறக்கிவிட ஜெயலலிதா யோசித்து வருவதாகவும்பேச்சு அடிபடுகிறது.

திமுக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால்,அதற்குப் போட்டியாக அதிமுக சார்பிலும் பெண் வேட்பாளரை நிறுத்தினால் சரியானபோட்டி கொடுக்க முடியும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

மேலும் சமீபத்தில் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகியுள்ள சசிகலாவும்நேரடியாக அரசியலுக்கு வரும் முடிவில் இருக்கிறார்.

என்னால் சசிகலாவை எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்துக்கு அழைத்து வர முடியும் எனகடந்த ஜூலை மாதம் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டதும்குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் வெறும் 7,100 ஓட்டு வித்தியாசத்தில் தான் இந்தத் தொகுதியில்திமுக வென்றது. எனவே இந்த முறை எப்படியும் வெல்வது என்ற வைராக்கியத்தில்அதிமுக உள்ளது.

தேமுதிக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட பொருளாளர் சுந்தரராஜனே மீண்டும்களம் காண்பார் எனத் தெரிகிறது. கடந்த தேர்தலில் 12,039 வாக்குகளைப் பெற்றார்சுந்தரராஜன். விஜயகாந்த்துக்கு இது சொந்தத் தொகுதி. அதாவது அவரது வீடு இத்தொகுதியில்தான் வருகிறது.

என்னதான் வன்னியர் கோட்டையான விருத்தாச்சலத்தில் வென்றாலும கூட, சொந்தஊரில் வெற்றி பெறவில்லையே என்று பேசுவோருக்கு பதிலடி கொடுக்க மதுரைமத்தியை பிடிக்க தேமுதிக தீவிரமாக உள்ளது. எனவே இம்முறை அக்கட்சிகடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளக் கூடும்.

மதுரை மத்திய தொகுதியில் முதல் முறையாக 1957ம் ஆண்டு தேர்தல் நடந்தது.அத்தேர்தலில் தியாகி வைத்தியநாத அய்யரின் மகன் வை.சங்கரன் காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.முத்துதோல்வியுற்றார்.

பின்னர் 1962ல் நடந்த தேர்தலிலும் சங்கரனே வெற்றி பெற்றார். 1967ல் தான்இத்தொகுதியை திமுக கைப்பற்றியது. வை.சங்கரனை திமுக சார்பில் போட்டியிட்டகோவிந்தராஜன் தோற்கடித்தார்.

1971ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவே வென்றது. காங்கிரஸ் (நிஜலிங்கப்பாபிரிவு) வேட்பாளராக போட்டியிட்ட பழ. நெடுமாறனை, திமுக சார்பில் போட்டியிட்டதிருப்பதி தோற்கடித்தார்.

1977ல் முதல் முறையாக அதிமுக களம் இறங்கியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்டலட்சுமி நாராயணன் அபார வெற்றி பெற்று இத் தொகுதியில் அதிமுகவின் கணக்கைஆரம்பித்து வைத்தார்.

அடுத்து வந்த 1980 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பழ.நெடுமாறன்சுயேச்சையாக போட்டியிட்டு திமுக வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனைதோற்கடித்தார்.

1984 தேர்தலிலும் நெடுமாறன் போடடியிட்டார். இம்முறை திமுக அணியில் அவர்இடம் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து அதிமுக அணியின் சார்பில் காங்கிரஸ்வேட்பாளராக தெய்வநாயகம் போட்டியிட்டார். வெற்றி தெய்வநாயகத்திற்கே.

1989ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் பால்ராஜும், காங்கிரஸ் சார்பில்தெய்வநாயகமும் போட்டியிட்டனர். இதில், திமுகவுக்கே வெற்றி கிடைத்தது.

1991ல் நடந்த தேர்தலில் தெய்வநாயகம் வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் மீண்டும்காங்கிரஸின் தெய்வநாயகமே வெற்றி பெற்றார்.

2001ல் நடந்த பொதுத் தேர்தலில் தமாகா வேட்பாளராக அதிமுக ஆதரவுடன்போட்டியிட்ட ஹக்கீம் வெற்றி பெற்றார். திமுக தோல்வியைத் தழுவியது.

கடந்த மே மாதம் நடந்த 13வது பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டபி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆக்கப்பட்டார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மரணம் அடைந்ததால் தற்போது இடைத் தேர்தல்வந்துள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் திமுகவும், காங்கிரஸும் தலா 4 வெற்றிகளைப்பெற்றுள்ளன. அதிமுகவுக்கு இது சற்று வீக்கான தொகுதிதான்.

தீர்மானிக்கும் ஜாதி ஓட்டுகள்:

தமிழகத்தின் ஏனைய பிற தொகுதிகளைப் போலவே இந்தத் தொகுதியிலும் ஜாதிஓட்டுக்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

இந்தத் தொகுதியில் பிள்ளைமார் சமூகத்தினரும், கோனார் சமூகத்தினரும் அதிகளவில்உள்ளனர். அதே போல முஸ்லீம்களும் பெருமளவில் உள்ளன. அதிமுகவின் முக்கியபலமாக விளங்கும் முக்குலத்தோர் ஓட்டுக்களும் உள்ளன.

ஆனால், பிள்ளைமார்-முஸ்லீம்களின் ஓட்டு பெரும்பான்மையாக யாருக்குவிழுகிறதோ அந்தக் கட்சிக்கே வெற்றி என்ற நிலை உள்ளது.

சசிகலாவை இங்கு நிறுத்த வேண்டாம் என ஜெயலலிதா முடிவு செய்தால் அதற்குபிள்ளைமார்-முஸ்லீம்கள் ஓட்டுக்களே முக்கிய காரணமாக இருக்கும். முக்குலத்தோர்அதிக அளவில் இருந்தாலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகபிள்ளைமார்-முஸ்லீம் ஓட்டுக்களே உள்ளன.

மேலும் சசியை நிறுத்தினால் இந்த தொகுதியின் தலித் வாக்குகள் அதிமுகவை விட்டுவிலகிச் செல்லும் அபாயமும் உள்ளதாக அக் கட்சியினரே கூறுகின்றனர்.

வாக்காளர் எண்ணிக்கை:

மதுரை மத்திய தொகுதியில் மொத்தம் 1,32,231 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்ஆண்கள் 63,333. பெண்கள் 65,898

கடந்த தேர்தல் நிலவரம்:

மொத்த ஒட்டுக்கள்: 1,34,913
பதிவானவை: 94,226
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்(திமுக) - 43,185
எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக) - 35,992
சுந்தரராஜன் (தேமுதிக) - 12,038

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X