• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மீது பழி சுமத்த ஆள் தேடும் கருணாநிதி: ஜெ

By Staff
|

சென்னை:

என் மீது பழி சுமத்த ஆள் தேடுகிறார் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர் கருணாநிதி தன்னால் பதில் சொல்ல முடியாத விஷயம் என்றால்அடுத்தவரிடம் தள்ளி விட்டு விடுவார். இது அவரது வழக்கம். இந்த வழக்கப்படி அவருக்கு அறிக்கை விட சிலர்கிடைப்பார்கள். அது அரசு அதிகாரியாக, காவல் துறை அதிகாரியாக அல்லது ஏதாவது ஒரு அமைச்சராகஇருக்கக்கூடும்.

இப்பொழுது கருணாநிதிக்கு கிடைத்திருக்கிற ஆள் ஆற்காடு வீராசாமி. இவர் கடந்த 17ம் தேதி அன்று ஓர்அறிக்கை வெளியிட்டு, அந்த அறிக்கை பத்திரகைகளிலும் வெளி வந்திருக்கிறது.

சிக்குன் குனியா நோயினால் 155 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டது தவறாம். ஒருபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேனாம். இது உண்மையா? உண்மையென்றால் அந்த 155 பேர்களின்பெயர்களையும், முகவரியையும் வெளியிடத் தயாரா? என்று ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒர் அரசு தகவல் பெற எவ்வளவோ துறைகள், சாதனங்கள் இருக்கின்றன. அந்தத் துறைகளிலிருந்து பெறுவதைவிட்டு விட்டு என்னிடம் தகவல் கேட்கிறார் ஒரு அமைச்சர். 155 பேருக்கு மேல் சிக்குன் குனியா நோயினால்இறந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பேர் அந்த நோய்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.

பல லட்சக்கணக்கான மனித உழைப்பு நாட்கள் நோயினால் பறிபோய், வேலை செய்ய முடியாமல், வருமானம்இல்லாமல், ஏழை எளிய மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பன போன்ற விஷயங்கள் பத்திரிகைகளில்வருகின்றனவே. இவை கருணாநிதியின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?

கருணாநிதியும் சரி, அவரது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சரி, சிக்குன் குனியா நோய் இல்லையென்றும்,அதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சட்டமன்றத்தில் பேசி பதிவு செய்து விட்டார்கள். அதனைநிலை நாட்டும் முயற்சியில் இருக்கிறார்களே தவிர, நோயைக் கட்டுப்படுத்தவில்லை. தற்காப்பு நடவடிக்கைஎடுக்கவில்லை. உரிய சிகிச்சையும் அளிக்க வில்லை.

நானோ இந்த நோய் தமிழ் நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 120 நாட்களாக 155 பேருக்கு மேல் இந்தநோயினால் உயிரிழந்துவிட்டார்கள் என்று சொல்லி இதைக் கட்டுப்படுத்தாத இந்த அரசைக் கண்டித்துடன்,கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்தி இந்த ஆட்சியின் கேளாக் காதுக்குஎட்டும்படி செய்து விட்டேன்.

ஆனால் இப்போது கருணாநிதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்.அந்த மாநாட்டில் மறைமுகமான நிகழ்ச்சி நிரலாக இருந்தது என்னவென்றால் சிக்குன் குனியா நோயைக்கட்டுப்படுத்தவது தான்.

அந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கட்டிவிட்டார் கருணாநிதி. நோகைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் அவர்களிடமா இருக்கிறது? எல்லாவற்றையும் விட கொடுமையானது, இந்த அரசு, சிக்குன் குனியாநோய்க்கு என்ன மருந்து தருவது எந்று கூட ஆலோனை வழங்க முடியாத பரிந்துரை செய்ய முடியாத அரசாகஇருப்பது தான். இது மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆற்காடு வீராசாமி மூலம் கருணாநிதி கேட்டவாறு சிக்குன் குனியா நோயினால் உயிரிழந்த அப்பாவிகளின்பட்டியலை இத்துடன் தொகுத்து தந்துள்ளேன்.

பத்திரிகைகள் மற்றும் நேரடியாகக் கிடைந்த விவரங்கள் படியும், மாவட்ட வாரியாக தொடர்பு கொண்டு எனக்குதெரிவிக்கப்பட்ட தகவல்களையும் பார்த்தால், இதுவரை நான் சொல்லி வந்த 155 பேரூக்கு மேலாகஉயிரிழந்துள்ளனர். அதன் படி சிக்குன் குனியாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆகும்.

இந்தத் தகவல்களை அரசு மருத்துவமனை பதிவேடுகளில் தேடினால் கிடைக்காது. முதல்வரும், அமைச்சரும்சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் இல்லையென்று உறுதி தெரிவித்தப்படியால், அரசு மருத்துவமனைகளில்சிக்குன் குனியா பாதிப்பு என்ற குறிப்பிடப்படவே இல்லை.

சில இடங்களில் காய்ச்சல் சார்ந்த நோய் என்று குறிப்பிட்டு மரணம் என்று மட்டும் சான்றிழழ்அளித்திருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X