For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் பிரேமலதா தீவிர பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Premalatha

திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களித்தும் மக்களின் நிலை மாறவில்லை என தேமுதிக, தலைவர்விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.தி

இடைத் தேர்தல் நடக்கவுள்ள மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா செய்த பிரசாரம்:

இதுவரை திமுக மற்றும் அதிமுகவுக்கு மாறி மாறி மக்கள் ஓட்டு போட்டுள்ளீர்கள். ஆனால், மக்கள் நிலைமாறவில்லை. ஆனால், விருத்தாசலத்தில் தேமுதிக வெற்றி பெற்றதால் 4 மாதங்களில் விஜயகாந்த் அங்கு பலவளர்ச்சி பணிகளை செய்துள்ளார்.

அங்கு பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் அனைவருக்கும் இலவச கலர் டிவி,இலவச நிலம் மற்றும் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவதாக திமுகவினர் கூறினர். ஆனால், அனைவருக்கும்அரிசி கிடைக்கவில்லை.

எனவே, மத்திய தொகுதி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தேமுதிக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.

விஜய்காந்த்:

இந் நிலையில் விருத்தாசலத்தில் உள்ளாட்சி தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்ட விஜய்காந்த் பேசுகையில்,

தேமுதிக துவங்கிய 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது நான் மக்களோடு தான் கூட்டணிவைத்திருந்தேன். உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுகின்றேன்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவினருக்கு பட்டா போட்டு கொடுத்தது போல் இரு கட்சிகள் மட்டும் தான் மாறி மாறிஆட்சி செய்ய வேண்டுமா?. இந்த இரு கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால்,தமிழகத்தில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடிகனாக இருந்தாலும் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் வரை ஏழை குழந்தைகளின்கல்விக்காக செலவு செய்து வருகிறேன். நான் உலகின் முதல் பணக்காரராக இருந்திருந்தால், அரசியலுக்கேவராமல் தர்மம் செய்து கொண்டு இருப்பேன்.

மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து மனம் தாங்க முடியாமல் தான் அரசியல் கட்சி துவக்கினேன். மற்ற அரசியல்கட்சிகள் செய்யும் தவறுகளை நான் செய்ய மாட்டேன். விருத்தாசலம் தொகுதி மக்கள் என்னை தலை நிமிர்ந்துநடக்க வைத்தவர்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் மாறவாமல் இருப்பேன்.

முன் இருந்த எம்எல்ஏக்கள் போல நான் 50, 100 லஞ்சம் வாங்கிக் கொண்டு கையெழுத்து போடுவது கிடையாது.விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சொந்த செலவில் பெட் வாங்கிக் கொடுத்தேன்.

என்னை மற்ற அரசியல் கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் திராவிடனா? அவரின்கொள்கை என்ன என கேள்வி கேட்கிறார்கள். நான் திராவிடனா என பேச விரும்பவில்லை. அதற்கு மக்கள் பதில்சொல்வார்கள். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை தான் எனது கொள்கை.

முரசு சின்னம் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. தேமுதிகவினரை விலை பேசுகின்றனர். கடத்திச் செல்கின்றனர்.நான் எதிர் நீச்சல் போட்டு வளர்ந்தவன். கடந்த தேர்தலில் முரசு கொட்டி தீபம் ஏற்றி வைத்தீர்கள். இப்போதுதீபமே சின்னமாக எடுத்து தேர்தலை சந்திக்கிறோம். என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமல்கெட்டவர்கள் உண்டு என்றார் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X