For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வன்முறை- விவாத கூட்டத்துக்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:உள்ளாட்சி தேர்தல் வன்முறைகள் பற்றி விவாதிக்க நடைபெறுவதாக இருந்தகூட்டத்தை, போலீஸை ஏவி விட்டு தடை செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி எனமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயகத்தின் நாடித் துடிப்பைச் சீராக இயக்குபவை தான் தேர்தல்கள். ஆனால்,தமிழக உள்ளாட்சி தேர்தலில், குறிப்பாக சென்னை மாநகராட்சி தேர்தலில்ஆளுங்கட்சியின் வன்முறை வெறியாட்டம், தலைநகரத்து மக்களைப் பெரும் பீதிக்குஉள்ளாக்கியது.

காவல்துறையின் நேரடிப் பங்களிப்போடு ஆளுங்கட்சி குண்டர்களின் அராஜகம்,ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் நடந்தது. ஆளுங்கட்சி ஏடுகள் தவிர அனைத்துஏடுகளும், இந்த அநீதியை ஆதாரங்களோடு கண்டித்தன.

இதன் பின்னணியில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நல்ல எண்ணமும், நாட்டமும்கொண்டவர்கள், ராஜாஜி பொது விவகார மையத்தின் சார்பில் சென்னையில்"தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் தலைமையில் முன்னாள் போலீஸ்கமிஷனர் வி.ஆர்.லட்சுமி நாராயணன், பத்திரிகையாளர் சோ, முன்னாள் எம்பிஇரா.செழியன் ஆகியோர் பேசுவதாக அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.

மண்டபங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட சிறப்பு கூட்டங்களுக்கு, வழக்கமாககாவல்துறை அனுமதி மறுக்கப்படுவது இல்லை.

ஆனால், சென்னை மாநகர போலீசார், இந்த கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்றுவாய்மொழியாகக் கூறி, கூட்டத்தை நடத்தக் கூடாதென கூட்டம் நடப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் மியூசிக் அகடமி அரங்கப் பணியாளர்களுக்குத் தெரிவித்து,கூட்டம் நடைபெறாமல் தடுத்து விட்டனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கூட அண்ணாதுரை அரசாங்கத்தை விமர்சித்து,மண்டபங்களில் எண்ணற்ற கூட்டங்களில் பேசி உள்ளனர். இன்றைய முதல்வர்எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரது கூட்டங்கள் எந்த இடத்தில்நடந்தாலும், அன்றைய ஆளுங்கட்சி அதை தடை செய்தது இல்லை.

நெருக்கடி நிலை காலத்தில் கூட மண்டபங்களில் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றுஇருக்கின்றன. இவ்வாறு இருக்க, சென்னையில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல்பற்றிய கூட்டத்தை முதல்வர் கருணாநிதி, காவல்துறையை ஏவி நடக்க விடாமல்செய்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என வைகோ கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X