For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே மேடையில் கருணாநிதி, ராமதாஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தனித் தமிழகம் உருவானதன் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியுடன், பாமக நிறுவனர்ராமதாஸும் கலந்து கொண்டார். திமுக மீது கடுமையாக குற்றம் சாட்டிய பின்னர் கருணாநிதியுடன், ராமதாஸ்சேர்ந்து கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

1956வது ஆண்டு பரந்து விரிந்த சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய புதியமாநிலங்கள் உருவாகின. இவை போக மீதமிருந்த பகுதி சென்னை மாநிலம் என அறிவிக்கப்பட்டது. பின்னர்1968ம் ஆண்டு தமிழ்நாடு என சென்னை மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டது.

மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் தனித் தமிழகம் உருவானதன் பொன் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மாலையில் விழா எடுக்கப்பட்டது.

இதில் ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில்கருணாநிதி பேசுகையில், 1968ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டு, அந்தநாளை விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்ட நாளில் அதை தொடங்கி வைக்க இதே இடத்திற்கு அண்ணாவந்தார்.

அப்போது அண்ணாவுக்கு உடல் நலம் சரியில்லை. இருந்தும், இருப்பது ஒரு உயிர், அது போகப் போவதும் ஒருமுறை. நல்ல காரியத்திற்காக அது நடக்கட்டுமே என்றுதான் நான் இந்த விழாவுக்கு வந்தேன் என்றார். அதேநிலையில் தான் இப்போது நானும் இருக்கிறேன். உடல் நலம் சரியில்லை என்ற போதிலும் கூட இது தமிழ் விழாஎன்பதால் வந்து விட்டேன்.

எல்லை காக்க நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் 149 பேருக்கு, இந்த எல்லைப் போராட்டத்தில்ஈடுபட்ட இந்த மான மறவர்களுக்கு, தமிழ்த் தாயின் தவப்புதல்வர்களுக்கு இதுவரை 3000 ரூபாய் மட்டுமேஉதவித் தொகையாக கொடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவை முன்னிட்டு இன்றுதொட்டு அந்தத் தொகை 4000ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என அறிவிக்கிறேன்.

அதைப் போல அந்தக் குடும்பங்களில் யாரேனும் எஞ்சியிருப்பார்களேயானால், எஞ்சியுள்ளவர்களுடையவாழ்க்கைக்காக, குடும்பப் பாதுகாப்புக்காக, அவர்களுடைய மரபுரிமையினருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்வழங்கப்பட்டதை மாற்றி இனிமேல் 2000 ரூபாயாக வழங்கப்படும்.

1924ம் ஆண்டு நான் பிறந்தேன். இந்த ஆண்டுக்கு வேறு பல சிறப்புகளும் உள்ளன. இந்த ஆண்டில் ஒரு மிகமிக சாதாரண குடும்பத்தில், எள்ளி நகையாடக் கூடிய ஒரு குடும்பத்தில் இழித்து பேசக் கூடிய ஒரு குடும்பத்தில்நான் பிறந்தேன். அதனால் தான் இந்த இழிமொழிகளை பழிச்சொற்களை எந்த நேரத்திலும் தாங்கிக் கொள்ளக்கூடிய மனப் பக்குவத்தை நான் பெற்றுள்ளேன்.

1994ம் ஆண்டுதான் பிரச்சினைக்குரிய காவிரி ஒப்பந்தம் பிறந்தது. மாவீரன் லெனின் மாண்டார். வைக்கம்வீரரானார் பெரியார். எவ்வளவு சரித்திரப் புகழ் பெற்ற பக்கங்கள் என்னுடைய பிறப்பை ஒட்டி இருக்கின்றனஎன்பதை எடுத்துச் சொல்வதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

திருமாவளவன் சொன்னதைப் போல இது மகிழச்சியோடு கொண்டாடுகிற விழாவா? அல்லது வரவு செலவுஎன்று பார்த்தால் இந்த மொழிவாரிப் பிரிவினையால் நமக்கு வரவு அதிகமா.? செலவு அதிகமா என்று பார்த்தால்வரவு குறைவுதான், செலவுதான் அதிகம்.என்னென்ன செலவு என்று பார்த்தால் பீர்மேடு, தேவிகுளம் நம்மிடம் இல்லை. அது போய் விட்டது. அதுசெலவுக் கணக்கில் போய் விட்டது. வரவு கணக்கில் இருப்பது நாம் தாம்.

நாம் மிச்சமிருக்கிறோமே. அதுதான் இந்த மாநிலப் பிரிவினையால் ஏற்பட்ட நன்மை.ஒரு தெருவில் தீப்பிடித்து எரிந்து வீடுகள் எல்லாம் சாம்பலாகி எல்லாம் போய் விட்டதே என்று அழுகிறநேரத்தில் தாய் பெற்ற குழந்தை மட்டும் உயிரோடு ஒரு மூலையில் இருப்பதைப் பார்த்து அந்தக் குழந்தையைத்தூக்கிய தாய் என் கண்ணே, நீ பிழைத்து இருக்கிறாயே என்று கொஞ்சுவாளே அதைப் போலத்தான் நம்முடையமொழி தமிழ்,

இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பிழைத்திருக்கிறது.

அதை வளர்ப்போம், அதை வாழ்த்துவோம், அதற்கு வலிமை சேர்ப்போம் என்ற அந்த எண்ணத்தைத்தான் இந்தமொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நாம் பெற்றிருக்கின்ற உறுதியாக கொள்ள வேண்டும் என்றார்கருணாநிதி.

நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா தமிழிலேயே பேசினார். அவரது கொஞ்சு தமிழை அவையில் கூடியிருந்தோர்கைதட்டி பாராட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுபேசினர்.

டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தமிழ் மொழி உலகத்தின் மூத்த மொழி. இந்திய மொழிகளிலேயே பழமையானமொழி. திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளார்.

அந்தத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க 1956ம் ஆண்டு சி.சுப்ரமணியம் சட்டம் கொண்டு வந்தார்.அப்போது பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்று கூறினார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழ்முழுமையான ஆட்சி மொழியாக இல்லை. இது வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் முழுமையான ஆட்சி மொழியாகவில்லை, பாட மொழியாகவில்லை, பயிற்சிமொழி ஆகவில்லை, ஆலய மொழி ஆகவில்லை. விளம்பரப் பலகைகளில் தமிழையே காணவில்லை. நாம்பேசும் பேச்சிலும் கூட ஆங்கிலக் கலப்பே உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். இதை செய்ய கலைஞரால் மட்டுமே முடியும். வேறு யாரும் இதைச் செய்யமுடியாது. அதற்கான தகுதியும் வேறு யாருக்கும் கிடையாது. மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் எனகலைஞர் நினைக்கிறார். அது உங்களால்தான் முடியும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் செய்ய வேண்டும். ஊடகங்களில் தமிழைக் கொலை செய்துவருகிறார்கள். இதை நிலை நீடித்தால் ஊடகங்களே தமிழ் மொழியைக் கொலை செய்து விடும். ஊடகங்கள்செய்யும் தமிழ்க் கொலையை சொல்லி மாளாது.

தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்லிப் பாருங்கள். அகம் என்றால் உள்ளம், உயிர். தமிழைஅகமாகக் கொண்டு தமிழகம் அமைய வேண்டும். அதற்காக சட்டம் கொண்டு வாருங்கள். அதுவும் உங்கள்காலத்தில் அமைய வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்போம்என்றார் ராமதாஸ்.

இதற்கு தனது பேச்சின்போது கருணாநிதி பதிலளிக்கையில், உங்கள் காலத்தில் செய்ய வேண்டும் என்றுசொல்லாதீர்கள். நம்முடைய காலம் என்று சொல்லுங்கள். நம்முடைய காலத்திலேயே இதை செய்து முடிப்போம்என்றார்.

இதேபோல பாமக சார்பிலும், மதிமுக சார்பிலும் தனித் தனியாக தனித் தமிழகம் உருவானதன் 50வது ஆண்டுவிழா கூட்டங்கள் நடந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X