For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரஸ் டிசைனரானார் இமெல்டா மார்கோஸ்

By Staff
Google Oneindia Tamil News

மணிலா:பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோசின் மனைவி இமெல்டா மற்றும் அவரதுமகள் மரியா மார்க்கோஸ் ஆகியோர் வடிவமைத்துள்ள நகைகள், உடைகள்,ஷூக்களின் கண்காட்சி மணிலாவில் தொடங்கியுள்ளது.

Imelda Marcosஇமெல்டா மார்க்கோஸையும், அவரது ஆடம்பரத்தையும் அவ்வளவு சீக்கிரம்யாராலும் மறந்திருக்க முடியாது. பிலிப்பைன்ஸை ஆட்டிப்படைத்து வந்தமார்க்கோஸின் மனைவிதான் இமெல்டா.

ஆடம்பரப் பிரியையான இமெல்டா தனது சொந்த உபயோகத்திற்காக மக்கள்வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளஆடைகள், நகைகள்,செருப்புகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார். இதில் வைரம் பதிக்கப்பட்டசெருப்புகளும் அடக்கம்.

மார்க்கோஸ் ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின்னர் இமெல்டாவின்ஆடம்பர சொகுசு வாழ்க்கை குறித்த விவரங்கள் கதை கதையாக வெளிவந்தன.3,000க்கும் மேற்பட்ட செருப்புகளை இமெல்டா வைத்திருந்தார்.

1986ம் ஆண்டு மக்கள் புரட்சி வெடித்த பின்னர் இமெல்டாவும், மார்க்கோஸும்நாட்டை விட்டு தப்பி ஓடினர். அப்போது இவர்கள் வசித்த ஜனாதிபதி மாளிகையில்இமெல்டா விட்டுச் சென்ற 1,200 செருப்புகள் இறைந்து கிடந்தன. இவற்றின் மதிப்புபல கோடிகள்.

Imelda Marcosமுன்னாள் மிஸ்.பிலிப்பைன்ஸ் அழகியான இமெல்டா தற்போது பேஷன் டிசைனராகமாறியுள்ளார். இவரும் இவரது மகள் மரியாவும் சேர்ந்து நகைகளை வடிவமைத்துஅவற்றை விற்பனைக்கு விடவுள்ளனர். இமெல்டா கலெக்ஷன் எனபெயரிடப்பட்டுள்ள இந்த நிகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை மணிலாவில்தொடங்கியுள்ளது.

இதுதவிர நவீன ரக ஆடைகள், ஷூக்களையும் இவர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.இவற்றில் பெரும்பாலானை ஏற்கனவே இமெல்டா பயன்படுத்தியவையாம்.அவற்றை மறு டிசைன் செய்து விற்பனைக்கு வைத்துள்ளாராம் இமெல்டா.

77 வயதாகும் இமெல்டாவின் இந்த கண்காட்சியில் வக்கப்பட்டுள்ளவை நல்லவிலைக்கு விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 20 டாலர் முதல் விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சி குறித்து இமெல்டா கூறுகையில், விலை மதிக்கமுடியாதவற்றைத்தான் நாங்கள் விற்பனைக்கு வைத்துள்ளோம் . எனது பேரன்மார்ட்டின் கொடுத்த ஐடியாவால்தான் இந்தக் கண்காட்சிக்கு முடிவு செய்தேன்.சாதாரண குப்பையிலிருந்து கூட நீங்கள் அழகான டிசைனை செய்து விடுகிறீர்கள் எனஅவன் என்னைப் பாராட்டினான். அதுதான் இந்தக் கண்காட்சிக்கு என்னைத்தூண்டியது.

எனது தாயார் எனக்குக் கொடுத்த நகைகளை மறு டிசைன் செய்து அவற்றையும்கண்காட்சிக்கு வைத்துள்ளேன். பார்ப்பதற்கே இவை சந்தோஷத்தைக் கொடுக்கும்என்கிறார் இமெல்டா.

இமெல்டா மீது கடந்த 1990களில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்தத்தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ததில் தண்டனை ரத்தானது.

மார்க்கோஸ் 1989ம் ஆண்டு ஹவாய் தீவில் மரணமடைந்தார். அதன் பின்னர்இமெல்டாவும், மார்க்கோஸ் குடும்பத்தினரும் 1991ல் பிலிப்பைன்ஸ் திரும்பினர்.இமெல்டா குடும்பத்தைச் சேர்ந்த பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்சுமத்தப்பட்டன. ஆனால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

வயது போன பின்னரும் கூட தனது ஃபேஷன் சூழலிலிருந்து இமெல்டா இன்னும்விடுபடவில்லை என்பதையே இந்தக் கண்காட்சி காட்டுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X