For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்ஸல்கள் குறித்து ரகு பரபரப்பு வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:10ம் வகுப்பு படித்தபோது, சக மாணவரின் தாக்கத்தால், நக்சலைட்டாக மாறியதாக டெக் மது எனப்படும் ரகுபோலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னையிலிருந்து ஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள், ராக்கெட் குண்டுகளைஅனுப்பியது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த ரகுவும், அவரது மனைவி சுதாராணியும் ஆந்திராபோலீஸில் சரணடைந்துள்ளனர். தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும் கோரியுள்ளனர்.

Raghu with Sudha Rani2 நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீஸாரும், தமிழக கியூ பிரிவு போலீஸாரும் சேர்ந்து ரகுவிடம் விசாரணைநடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது பல்வேறு பரபரப்பு தகவல்களைக் கொடுத்துள்ளார் ரகு.

ரகு கொடுத்துள்ள முழு வாக்குமூல விவரம்:

நான் 1972ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்தேன். எனது சொந்த ஊர் வாரங்கல் மாவட்டம் கேசமுத்திரம்.தந்தை பெயர் குமாரசாமி, தாயார் வெங்கடம்மாள். தந்தை இறந்து விட்டார். தாயார் கூலி வேலை பார்த்துவருகிறார்.

எனக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார். அவருக்குத் திருமணம் ஆகி விட்டது. கடந்த 1984ம் ஆண்டு எனதுகுடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது. நான் நரசிம்மபேட்டையில் 10வது வகுப்பும், ஜெகஜீவன் ராம் பள்ளியில்பிளஸ்டூவும் படித்தேன்.

Raghu with Sudha Rani10வது வகுப்பு படித்தபோது, கிருபால் என்ற சக மாணவர் மாவோயிஸம் குறித்து எனக்குத் தெரிவித்தார். அந்தக்கருத்து என்னை ஈர்த்தது. இதனால் 10வது வகுப்பு படித்தபோதே நான் நக்சலாக மாறி விட்டேன்.

பின்னர் படிப்பை முடித்ததும் ஹைதராபாத்தில் லேத் ஒன்றில் வேலை பார்த்தேன். டெனிக்க்கல் தகுதி இருந்ததால்மாவோயிஸ்டுகளுக்குச் சொந்தமான ஜபல்பூர் ஆயுதத் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன்.

பின்னர் ஆயுதத் தொழிற்சாலைத் தலைவரானேன். 1992ல் முழு தொழிற்சாலையும் எனது கட்டுப்பாட்டுக்குள்வந்தது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத்தான் அங்கு தயாரித்தோம். பின்னர் 1998ல் மூடி விட்டோம். 2வருடங்கள் நான் நல்லமலா காட்டுப் பகுதியில் இருந்தேன்.

2001ல் சென்னை அருகே உள்ள அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆயுதம்தயாரிக்க முடியுமா என ஆய்வு செய்தேன். இதற்காக அடிக்கடி சென்னை வர நேரிட்டது. இதையடுத்துநெல்லூரில் லட்சுமி என்ஜீனியரிங் என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்தேன்.

2003ம் ஆண்டு ராக்கெட் தயாரிப்புக்கான பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத தொடர்ந்து அம்பத்தூர்வந்த நான் தேவர் நகரில் உள்ள தெரசா என்பவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து 2003ம் ஆண்டுஜூன் 12ம் தேதி தங்கினேன்.

முதல் கட்டமாக 150 ராக்கெட்டுகளை தயாரித்து அனுப்பினேன். இதுதான் நான் முதன் முதலில் ராக்கெட்டுகள்அனுப்பியது. அதன் பிறகு தொடர்ந்து இந்தப பணியில் ஈடுபட்டேன். இடையில் ஆந்திரா சென்று 300 பேருக்குஆயுதப் பயிற்சி அளித்தேன்.

2003ம் ஆண்டு, சென்னை பாடி பகுதியில் பாரத் என்ஜீனியரிங் என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். லேத்மிஷன் வாங்கினேன். 2005ல் மில்லிங் மிஷன் வாங்கினேன். பின்னர் எனது வீட்டு முகவரியைக் கொடுத்துஓட்டுனர் உரிமம், காஸ் இணைப்பு, குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிஸி உள்ளிட்டவற்றை பெற்றேன்.

ராக்கெட் குண்டுகளைத் தயாரித்து அனுப்புவது எனக்கும், அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணாவுக்கும் மட்டுமேதெரியும். இந்தப் பணிக்காக எனக்கு ராமகிருஷ்ணா ரூ. 30 லட்சம் பணத்தைக் கொடுத்தார்.

2001ல் ராமகிருஷ்ணாவைப் பார்க்கச் செல்லும்போதுதான் சுதாராணியைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே காதல்மலர்ந்தது. அப்போது ராமகிருஷ்ணாவின் பாதுகாப்புப் பணியில் சுதாராணி இருந்தார். எங்களது காதல் குறித்துதெரிய வந்தபோது அமைப்பின் மையக் குழுவில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 2002ல் அவர்களே சுதாராணியின் கையைப் பிடித்து என்னிடம் கொடுத்தனர். அதுதான் எங்களதுதிருமணம். திருமணத்திற்குப் பின்னர் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையை செய்து விட்டனர்.அதன் பின்னர் ஒரு மாதம் இருவரும் சேர்ந்து இருந்தோம். பின்னர் நான் சென்னை வந்தேன். சுதாராணிதொடர்ந்து ராமகிருஷ்ணாவின் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.

நான் இதுவரை 40 பேரை இயக்கத்தில் சேர்த்துள்ளேன். இயக்கத்தில் 8,000 பேர் முழு நேரப் பணியில் உள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா உள்பட மொத்தம் 16 மாநிலங்களில் எங்களது படையினர் உள்ளனர். தமிழகத்திலும்தொடங்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.

2004ல் நானும், சுதாராணியும் இயக்கத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். ஆனால் அதற்கு ராமகிருஷ்ணாஅனுமதி தரவில்லை. இந் நிலையில் 2005ல் எனக்கு விபத்தில் கால் சேதமடைந்தது. இதையடுத்து என்னைப்பார்த்துக் கொள்ள சுதாராணி வந்தார். அப்படியே என்னுடன் தங்கி விட்டார். கடந்த ஆண்டு ஊட்டிக்குச் சென்று 2நாட்கள் தங்கியிருந்தோம்.

சாதாரண வாழ்க்கையில் எங்களுக்கு பிடிப்பு ஏற்பட்டதால் காட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை.இதனால்தான் சரணடைய முடிவு செய்தோம்.இப்போது எனக்கு உள்ள ஒரே மனக் குறை, என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் என்றுகூறியுள்ளார் ரகு.

ரகு, சுதாராணியை பின்னர் ஆந்திர போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறைக் காவலில் வைத்தனர்.இருவரையும் மீண்டும் விசாரிக்க போலீஸ் காவலில் அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X