For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலையில் புகுந்த முல்லை பெரியாறு அணைவெள்ளம்-கம்பம்-குமுளி போக்குவரத்து துண்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:முல்லைப் பெரியாறு (குமுளி-தேக்கடி அணை) அணை நிரம்பி அபரிமிதமான நீர் சாலையில் வெள்ளமாகஓடுகிறது. இதனால் கம்பம்-குமுளி இடையிலான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தொடர்ந்து அதிக நீர் வந்து கொண்டுள்ள போதிலும், கூடுதல் நீரைசேமித்து வைப்பது தொடர்பாக தமிழக அரசு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல்அமைதியாக இருந்து வருவதால், அபரிமிதமான நீரை எப்படி சமாளிப்பது என்றுதெரியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டவிவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்தஅணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். அணை பலவீனமாக இருப்பதாககூறி நீர் இருப்பு அளவை 142 அடியாக கேரள அரசு குறைத்தது. கடந்த 1979ம்ஆண்டு இது மேலும் குறைக்கப்பட்டு 136 அடியாக குறைந்தது.

அன்று முதல் இன்று வரை 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க கேரள அரசுஅனுமதிக்காமல் உள்ளது. இதனால் அபரிமிதமாக அணைக்குத் தண்ணீர் வந்தும் கூடஅதைத் தேக்கி வைக்க முடியாமல் தமிழக அதிகாரிகள் பெரும்தவிப்புக்குள்ளாகின்றனர்.

தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்துஅதிகமாக உள்ளது. இதன் காரணமாக 136 அடியை நேற்று அணையின் நீர்மட்டம்தாண்டியது. இன்று நீர் மட்டம் 137.09 அடியை தொட்டது.

136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைப்பதா, இல்லையா என்பது குறித்துமுல்லைப் பெரியாறு நிலவரத்தைக் கண்காணித்து வரும் பொதுப்பணித்துறைஅதிகாரிகளுக்கு தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை.

இதனால் 136 அடியுடன் தண்ணீரை நிறுத்தி வைத்து மீதம் வரும் உபரி நீரை பல்வேறுமார்க்கங்களில் அதிகாரிகள் திருப்பி விட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதி நீர்இடுக்கி மாவட்டத்தில் உள்ள கேரளத்தின் சிறிய அணைகளுக்கு திருப்பிவிடப்படுகிறது.

மேலும் ஒரு பகுதி நீர், நான்கு மின் உற்பத்தி குழாய்கள் மூலமாகவும்வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையை ஒட்டிய குட்டி அணை வழியாகவழிந்தோடும் வெள்ள நீர் இருச்சில்பள்ளம் என்ற இடத்தின் வழியாக கம்பம்-குமுளிதேசிய நெடுஞ்சாலையில் புகுந்துள்ளது.

இதனால் இப்பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு குமுளி வழியிலான மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையானசெல்லார்கோவில் வழியாகத் தான் வாகனங்கள் சென்று கொண்டுள்ளன.

உபரி நீர் தற்போது இடுக்கி அணைக்கும், வைகை அணைக்கும் திருப்பி விடப்பட்டுவருகிறது. இடுக்கி அணைக்கு திடீரென அதிக நீர் வர ஆரம்பித்துள்ளால் அணைக்குப்பாதிப்பு ஏற்படுமோ என்று அம்மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இம் மாவட்ட மக்களின் பெயரைச் சொல்லித் தான் முல்லைப் பெரியாறு அணையின்உயரத்தை அதிகரிக்க விடாமல் கேரளம் தடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் அதை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கையை எடுத்து வீணாகும்தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும்,பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இதுதொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வராததால்,வீணாக வெளியேறும் உபரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதனையுடன்வேடிக்கை பார்த்தபடி உள்ளனர்.

இதற்கிடையே கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் இன்று அணைக்கட்டுப்பகுதிக்கு விரைந்துள்ளார்.

மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம்:

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஒன்றில் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக மத்திய நீர்ப்பாசனத் துறை, இரு மாநில முதல்வர்களுக்கும் தேதி குறிப்பிட்டுச்சொல்லுமாறு கடிதம் அனுப்பியது.

இந்தக் கடிதத்திற்கு கருணாநிதி இன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஒன்றில் வசதியான தேதியில்,பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X