For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுக்காக பரிதாபப்படும் கருணாநிதி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:திமுக அரசின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற போக்கை முதலில்ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்து கருணாநிதிவெளியிட்டுள்ள அறிக்கை:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தான் வெளியிட்ட அறிக்கையையை, என்னையும்,மத்திய அரசையும் அவதூறு கூறுவதற்கே பயன்படுத்தியுள்ளார். போகிற போக்கில்கம்யூனிஸ்டுகளையும் ஒரு தட்டு தட்டிப் பார்த்துள்ளார்.

காவிரிப் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினையாகட்டும்,தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர் பிரச்சினையாக கருதி இங்குள்ள அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்று சென்னையில்அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி,

அக்கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தி, இறுதியாக உச்சநீதிமன்றக் கருத்தின்அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதற்கு உரியபலன் கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் எனவும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட 2 பேர் தங்களது கருத்தைத்தெரிவித்ததோடு, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்போ, வெளிநடப்போசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு பல நாட்கள் காத்திருந்து விட்டு இப்போது திடீரென விழித்துக்கொண்டு ஜெயலலிதா அறிக்கை என்ற பெயரால் வசை மாரிப் பொழிந்திருப்பதுஎன்ன நியாயம்?

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தீர்ப்பை ஏன் எனது அரசு அமல் செய்யவில்லை என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

உண்மையில் அணையின் உயரத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது இங்கு ஆட்சியில் உட்கார்ந்திருந்தவர் ஜெயலலிதாதான்.

அந்தத் தீர்ப்பு வந்த பிறகு, அதற்கு அடுத்த மாதம் கேரள சட்டசபையில்,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக அவசரச் சட்டம் கொண்டு வந்துநிறைவேற்றப்பட்டது. அப்போது இங்கு இருந்ததும் அதிமுக அரசுதான்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும், அதன் பின்னர் கேரள அரசு சட்டத் திருத்தமசோதவை கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகும் ஜெயலலிதா அரசு ஏன் அவர்எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் ஜெயலலிதா அமைதியாகஇருந்தார்? ஏன் அசட்டையாக இருந்தார்?

தமிழக விவசாயிகளின் பிரச்சினை ஜெயலலிாதவுக்கு அப்போது முக்கியமாகத்தெரியவில்லையா? என்றெல்லாம் நாமும் கேட்க முடியுமல்லவா?

அப்போதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போது இந்த ஆட்சியைப் பற்றி குறைசொல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதற்குப் பெயர் என்ன?விதண்டாவாதம்தானே?

ஜெயலலிதா தனது அறிக்கையின் மூலம், மத்திய அரசையும், மாநில அரசையும், ஏன்அனைத்துத் தரப்பினரையும், கூட்டணிக் கட்சியினரையும் அநாகரீக வார்த்தைகளால்சாடுவதன் காரணம், ஆட்சியை இழந்து நிற்கும் வேதனைதான் என்பது நமக்குப்புரியத்தான் செய்கிறது.

இருந்தாலும் என்ன செய்வது, பரிதாபப்படத்தான் முடியும்! எல்லாவற்றையும்எதிர்ப்பது என்ற போக்கை மூட்டை கட்டி வைத்து விட்டு அதிமுகவும் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைநடைமுறைப்படுத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X