For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் கொடுமை-பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் நடப்பதுஉறுதிப்படுத்தப்பட்டால் அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மேலும் மாணவர்களை எந்த தனியார் பள்ளியாவது கொடுமைப்படுத்துவதாகத்தெரிய வந்தால் அந்தப் பள்ளியை அரசே ஏற்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல்சில்மிஷங்களில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில்சென்னை கொருக்குப்பேட்டையில், மாணவிகளிடம் ஒரு ஆசிரியர் செக்ஸ்சேஷ்டையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதேபோல, சேலம் அருகே ஓமலூரில் பிளஸ்டூ மாணவி கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகிகளே காரணம் எனவும் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

தொடரும் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவ,மாணவியரின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தங்கம் தென்னரசு தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்குற்றாலிங்கம், இயக்குனர் கண்ணன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்ஜெகன்னாதன், தொடக்க கல்வி இயக்குனர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்களை, சேட்டைகளில் ஈடுபடும் மாணவர்களைமுட்டி போட வைப்பது, கம்புகள், பிரம்புகள் உள்ளிட்டவற்றால் சரமாரியாகஅடிப்பது, அசிங்கமாக திட்டுவது, வெயிலில் மைதானத்தை சுற்றி ஓடி வர வைப்பதுஉள்ளிட்டவற்றை செய்யச் சொல்வது குற்றச் செயல்களாகும்.

இதேபோல மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் தொல்லை கொடுப்பதைஅறவே தடுக்க எத்தகையை நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும், ஆசிரியர்கள்மீது எழக் கூடிய புகார்களைக் கண்டுகொள்ளாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுகுறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

அதன்படி, மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் சம்பவம் நடந்தாலோ அல்லதுமாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டாலோ அந்த ஆசிரியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன்பள்ளிகளாக இருந்தால் அப்படிப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுஅந்தப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும்.

இதேபோல, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த விடுதிகள், அரசுஉதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த விடுதிகள், பள்ளிகளைச் சேர்ந்த ஆதரவற்றோர்இல்லங்கள் ஆகியவற்றில் மாணவ, மாணவியருக்கு பிரச்சினை ஏதும் உள்ளதா,அவர்கள் நல்ல முறையில் நடத்தப்படுகிறார்களா என்பது தீவிரமாககண்காணிக்கப்படும்.

இதுகுறித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லைஇருக்கிறதா என்பதை தீவிரமாக விசாரிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

விடுதிகளில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை இருந்தால், அந்த விடுதியின் வார்டன்மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.ஆசிரியர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்த பயிற்சி அளிப்பதில் அதிக முக்கியத்துவம்கொடுக்கப்படும். இதுதொடர்பாக யுனிசெப் நிறுவனம் மாதிரி பயிற்சியைஉருவாக்கியுள்ளது.

அதை நாமும் பின்பற்றி பயிற்சி அளிக்கலாம். பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நேரடியாக என்னிடம் புகார் கொடுக்கலாம். எனதுஅலுவலகத்திற்குப் போன் மூலம் புகார் தரலாம். அதேபோல மாவட்ட தன்மைக்கல்வி அலுவலர்களிடம் புகார் கொடுக்கலாம் என்றார் தென்னரசு.

ஓமலூர் பள்ளி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றகேள்விக்கு தென்னரசு பதிலளிக்கையில்,

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. ஆர்.டி.ஓ. விசாரணையும்நடந்து வருகிறது. மேல்நிலைப் பள்ளிக் கல்வி இயக்குனர் கருப்பசாமி பள்ளிக்குச்சென்று நேரடி விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணை அறிக்கைகள் வந்தபின்னர் அதன் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்தென்னரசு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X