For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ் விமானத்தில் இமாம்களுக்கு கைவிலங்கு !!

By Staff
Google Oneindia Tamil News

சிகாகோ:அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டுவலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையேபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள்பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமானஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களைகைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிரவிசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில்பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக பீனிக்ஸ் நிகரத்திற்குச்செல்லும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம்அமெரிக்க முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அரிஸோனா மாகாண அமெரிக்க, இஸ்லாமிய உறவுகளுக்கானகவுன்சிலின் சிவில் உரிமைகள் பிரிவு இயக்குனர் அபு ஹனோட் கூறுகையில்,தீவிரவாதிகளைப் போல இமாம்களை அமெரிக்க அதிகாரிகள் நடத்தியுள்ளனர்,அவமானப்படுத்தியுள்ளனர்.

விமானத்தில் இருந்தபடி தொழுகை நடத்தத்தான் அவர்கள் முயன்றுள்ளனர். இதைத்தொடர்ந்துஅவர்களுக்கு கைவிலங்கிட்டு அவமானப்படுத்தி வலுக்கட்டாயமாகதரையிறக்கியுள்ளனர்.

மின்னபோலிஸ் பகுதியில், நடந்த 3 நாள் வட அமெரிக்க இமாம்கள் சம்மேளனத்தின்மாநாட்டில் கலந்து கொள்ளவே இவர்கள் சென்றனர். இந்த மாநாடு குறித்து ஏற்கனவேஎப்.பி.ஐக்கும் உள்ளூர் காவல்துறைக்கும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை மனதில் கொள்ளாமல் இமாம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி விட்டது அமெரிக்க நிர்வாகம். இது இந்த இமாம்களை மட்டும் அவமதித்தசெயல் அல்ல, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையே அமெரிக்காகளங்கப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இஸ்லாம், இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றதேவையில்லாத, அர்த்தமற்ற பயம் வந்து விட்டது என்றார் அபு.

இந்த சம்பவத்தை சக பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் கண்டிக்காததுஆச்சரியமாக உள்ளது என்று கவுன்சிலின் செயல் இயக்குனர் நிஹாத் அவாத்கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்னபோலிஸ் விமான நிலைய செய்தித் தொடர்பாளர்பாட்ரிக் ஹோகன் கூறுகையில், யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தில் சம்பந்தப்பட்டஇமாம்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதாக பயணிகளும்,விமான ஊழியர்களும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விமான நிலைய போலீஸார் விரைந்து சென்று 6 பேரையும்விமானத்திலிருந்து கீழே இறக்கினர். பின்னர் பீனிக்ஸ் செல்லும் விமானத்தில்அவர்களை அனுப்பி வைத்தனர்.

விமானத்தின் நுழைவாயிலில் சென்று அவர்கள் தொழுகை நடத்த முயன்றதால்தான்இந்த பிரச்சினை எழுந்தது. அவர்கள் தொழத்தான் சென்றார்களா அல்லது வேறுஏதாவது சதிச் செயலா என்ற சந்தேகம் பயணிகளுக்கு எழுந்ததால் போலீஸாரைவரவழைத்தனர்.

சில பயணிகள் கூறுகையில், ஆறு பேரில் சிலர் ஈராக் போர் குறித்து அமெரிக்காவுக்குஎதிராக கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டனர். மொத்தத்தில் அவர்களதுசெயல்பாடுகள் சகஜமான பயணிகளைப் போல இல்லை. இதனால்தான் மற்றபயணிகளும், விமான ஊழியர்களும் அச்சமடைந்தனர்.

பயணிகளுக்கு அசெளகரியமான சூழல் எழுந்தால் அதை பொறுத்துக் கொள்ளமுடியாது என்று யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்ததால்தான் நாங்கள் தலையிடநேர்ந்தது.

பொதுவாக சந்தேகப்படுபவர்களை விமானத்திலிருந்து இறக்கப்படும்போதுஅவர்களுக்கு கைவிலங்கிடுவது வழக்கமான ஒன்றுதான் என்றார் ஹோகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X