டென்னிஸ் அழகிகள் பட்டியலில் சானியா!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்:டென்னிஸ் வீராங்கனைகளிலேயே சிறந்த 10 அழகிகள் பட்டியலில் இந்தியாவின்சானியா மிர்ஸா இடம் பெற்றுள்ளார்.

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா, டென்னிஸ்வீராங்கனைகளிலேயே அழகிகளை பட்டியலிட்டுள்ளது. பத்து அழகிகள் கொண்டஅந்தப் பட்டியலில் முன்னாள் சூப்பர் ஸ்டார்களான கப்ரியேலா சபாடினி, கிறிஸ்எவர்ட், ஸ்டெபி கிராப் ஆகிய முன்னாள்களும்;

மரியா ஷரபோவா, அன்னா கோர்னிகோவா, ஜஸ்டின் ஹெனின், மார்ட்டினாஹிங்கிஸ், டேனியலா ஹன்ட்சுக்கோவா, மேரி பியர்ஸ் மற்றும் சானியா மிர்ஸாஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சானியாவுக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருப்பவர் சபாடினி.

உலக பெண்கள் டென்னிஸில் 66வது இடத்தில் இருக்கும் சானியாவின் கனவெல்லாம்முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறுவதுதான். வீராங்கனையாக அந்த அந்தஸ்தைஎப்போது அடைவாரோ, ஆனால் அழகியாக முதல் பத்து இடங்களுக்குள் வந்துசாதனை படைத்து விட்டார் சானியா.

அட்டகாசமான இந்திய பாரம்பரிய உடையில், சானியாவின் அழகுத் தோற்றத்தையும்சின்ஹுவா பிரசுரித்து சானியாவையும், இந்தியாவையும் சேர்த்துகெளரவப்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...