For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஸ்கி மனிதர் சார்லஸ் மெக்லீன்

By Staff
Google Oneindia Tamil News

Charles Macleanசார்லஸ் மெக்லீன். இந்த ஸ்காட்லாந்து பார்ட்டி கொஞ்சம் விசித்திரமான மனிதர். வாயை திறந்தால் விஸ்கி தான்.விஸ்கி என்ற வார்த்தையை அவரிடம் போய்ச் சொன்னால் போதும், உட்கார வைத்து விஸ்கியின் வரலாறு, அதன்சுவை, அருமை, பெருமை, இத்யாதி, இத்யாதி என அள்ளி, தள்ளி விடுகிறார்.

விஸ்கி குறித்து நிறையப் புத்தகங்களை எழுதியுள்ளார் மெக்லீன். அவருடன் பேசுவதே, விஸ்கி சாப்பிடது போலஒரு கிக்கான விஷயம்தான்.

மெக்லீனுடன் உரையாட உட்கார்ந்தபோது ஒரு கையில் விஸ்கி கோப்பையும், மறு கையில் சிகாரும் புடைசூழத்தான் பேச்சைத் தொடங்கினார்.

அண்ணா, விஸ்கின்னா என்ன?

விஸ்கி என்பது ஒரு நாட்டின் ரத்தம் போன்றது (அட, சாமி). விஸ்கி பாட்டிலை வாங்கும்போது, வெறும்பாட்டிலை மட்டும் நாம் வாங்குவதில்லை. அந்த நாட்டின் கலாச்சாரத்தையும், உயர் பாரம்பரியத்தையும்சேர்த்துத்தான் வாங்குகிறோம் என்பார் எனது நண்பர் ஒருவர்.

விஸ்கியின் பிறப்பு ஸ்காட்லாந்தா, அயர்லாந்தா?

அது பெரிய கதை. உண்மையில் பிறந்தது அயர்லாந்துதான். ஆனால் பின்னாளில் ஸ்காட்லாந்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது (சின்ன புன்னகையுடன் ஒரு சிப்!)

சரி, இரண்டில் எது பெஸ்ட்?

சந்தேகமே இல்லை, ஸ்காட் விஸ்கிதான். ரொம்ப திருப்தியாகவும், சுவையாகவும் இருப்பதால். அடுத்தஇடம்தான் ஐரீஷ் விஸ்கிக்கு. அப்புறம் ஜப்பான், இந்தியா, ரோம் விஸ்கி கூட நல்லாதான் இருக்கும்.

விஸ்கி விரும்பிகள் எந்த நாட்டில் அதிகம்?

பிரான்ஸ்காரர்கள்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். அப்புறம் ஸ்பெயின். பிறகு அமெரிக்கர்கள். ஸ்காட்ச் விஸ்கிக்குஇந்தியாவில் நிறைய வரவேற்பு இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 85.5 மில்லியன் மிஸ்கி உலகம் முழுவதும்விற்பனையாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 70 மில்லியன்!

எங்கிருந்து இப்படிப்பட்ட மேட்டர்களைப் பிடிக்கிறீர்கள்?

ஓ, நான் நிறைய படிப்பவன். அப்படிப் படித்தபோது கிடைத்த புள்ளி விவரங்கள்தான் இவை. விஸ்கி குறித்தநிறையப் புத்தகங்கள் என்னிடம் உள்ளன. விஸ்கி குறித்த முழுமையான தகவல்கள் வேண்டும் என்றால் 17வதுநூற்றாண்டுக்கு நாம் போக வேண்டும்.

விஸ்கி குறித்த நூலை எழுத நான் 3 முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்வேன். மேலும் எனதுபயணத்தின்போது கிடைக்கும் தகவல்கள், அனுபவங்களையும் அதில் சேர்த்துக் கொள்வேன். நான் எங்கெல்லாம்போகிறேனோ அங்கு நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். அவர்களுடன் பேசும்போது புதுப் புதுத் தகவல்கள்கிடைக்கும். இப்படித்தான்!

நீங்கள் முதலில் ஒரு கலைஞராக இருந்தீர்கள். பிறகு வக்கீலாகவும் இருந்தீர்கள். இப்போது ஸ்காட்ச் விஸ்கியில்ஸ்பெஷலிஸ்ட். எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

தொழில் ரீதியாக நான் ஒரு ஓவியன். மூன்று பல்கலைக்கழகங்களில் பாடம் எடுத்துள்ளேன். வக்கீலுக்குப்படித்திருந்தாலும் கூட அது என்னைக் கவரவில்லை. எனவே இலக்கியத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.ஸ்காட்லாந்து குறித்த நிறைய கதைகளை நான் எழுதியுள்ளேன். பிறகு வரலாறு, பயணங்கள் உள்ளிட்டவைகுறித்தும் எழுதியுள்ளேன்.

அதுதான் திருப்பு முனையாக அமைந்தது. அப்படியே விஸ்கி குறித்தும் எழுத ஆரம்பித்தேன். இப்போதுஇணைய தள டிவி ஒளிபரப்பில் புகுந்துள்ளேன்.

முதல் டேஸ்ட் எப்போ?

ஒரு தீவுக்கு அருகே முதலில் குடியிருந்தோம். எனது அப்பா அப்போது ஒரு கெட் டு கெதருக்கு ஏற்பாடுசெய்திருந்தார். வருஷா வருஷம் அப்படி ஒரு ஏற்பாட்டை அவர் செய்வார். வீட்டுக்கு வந்திருந்தவர்களுக்குவிஸ்கி சப்ளை செய்யும் பணி எங்களுக்கு (பலத்த சிரிப்பு). அப்போதுதான் லேசாக ஒரு சிப் செய்து பார்த்தேன்.உங்க ஊர்லயும் அப்டி செய்வீங்கல்ல? நல்லா இருந்தது. அப்படி ஆரம்பித்ததுதான், இன்னும் நிக்கலை.18 வயதுக்கு மேற்பட்டோர் மது அருந்துவதற்கு ஸ்காட்லாந்தில் அனுமதி உண்டு.

உங்களது ஒவ்வொரு நாளும் எப்படி கழிகிறது?

திட்டமிட்டு எதையும் செய்ய மாட்டேன். இன்று பெங்களூர், திங்கள் கிழமை ஹைதராபாத், அப்புறம்ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா, சனிக்கிழமை கோவா, வெள்ளிக்கிழமை டெல்லி, இப்படியே. இந்த மாதத்தில்மொத்தமே 3 நாள்தான் தூங்கியிருக்கிறேன். அதுவும் கூட திட்டமிடாமல் தூங்கியதுதான் (வெடிச் சிரிப்பு).

எனது விடுமுறை நாட்களை ஸ்காட்லாந்து மலைப் பகுதி அருகே உள்ள எனது நண்பரின் பண்ணை வீட்டில்தான்கழிப்பேன். காலை 7 மணிக்கு எனது லாப்ரடார் நாயுடன் வாக்கிங் கிளம்புவேன். மலை மீது வாக்கிங் போவதுஜாலியான விஷயம். பிறகு எனது குழந்தைகளை 8.15 மணிக்கு பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் செல்வேன் அப்புறம்பிரேக்பாஸ்ட்.

பிறகு வெளியே செல்வேன். மாலை 3 மணிக்குத் திரும்புவேன். இரவு 7 மணி வரை வேலை இருக்கும். பிறகுஇரவு சாப்பாடு. குடும்பக் கதைகளை பேசியபடி பொழுது போகும்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்?

எனக்குப் பிடித்தவர் என்றால் இந்தியாவைச் சேர்ந்த எனது நண்பர் வில்லியம் டன்ட்ரோப். அவர் எழுதிய ஒயிட்மங்கூஸ் நாவல் எனக்குப் பிடிக்கும். இந்தியாவில் நடந்த கலகங்கள் குறித்து அழகாக எழுதியிருப்பார். அப்புறம்ஏஜ் ஆஃப் காளி என்ற நாவலும் படிக்க சுவையானது. அவர்களுக்குப் பிறகு அலெக்சாண்டர் கோல்ட் ஸ்மித்,விக்ரம் டாண்டன். இப்படி நிறைய இருக்கிறார்கள்.

இந்தியா என்றவுடன் எது உங்களுக்கு ஞாபகத்திற்கு வரும்?

வேறென்ன டிராபிக் ஜாம் தான்! இப்படி ஒரு டிராபிக்கில் எப்படித்தான் பைக்குகளையும், சைக்கிளையும் படுலாவகமாக ஓட்டிச் செல்கிறார்களோ, நம்பவே முடியவில்லை. அப்படியே போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுக்கெல்லாம் ஒரு தைரியம் நிச்சயம் வேண்டும். ஆனால் இவ்வளவு டிராபிக் ஜாம் இருந்தும் கூட பிறநாடுகளை விட இந்தியாவில் விபத்துக்கள் குறைவு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்தியா எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் நேரம் இல்லை.

வீட்டில் எப்படி?

அதை ஏன் கேட்கிறீர்கள். எனது மனைவிக்கு விஸ்கியின் வாசனை கூட பிடிக்காது. அவர் ஒரு பெயிண்டர்.இப்போது மேல் படிப்பு படிக்கிறார். எங்களுக்கு 3 குட்டிக் பசங்க என்று கேஷுவலாக சிரிக்கிறார் மெக்லீன்.

விஸ்கி வரலாற்றுக்காக ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வித்தியாச நபர்தான் மெக்லீன். விஸ்கி குறித்து விட்டால்மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார் மெக்லீன். ஆனாலும் போதை ஏறாமல் தனது பாதையில் தெளிவாகபோய்க் கொண்டிருப்பவர்.

பல பெக் அடித்த திருப்தி மெக்லீனின் இனிய பேச்சில். கைகுலுக்கி விடைபெற்றோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X