ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
தோஹா:தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்கிடைத்துள்ளன. கபடியில் இந்தியாவுக்கு தங்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
துப்பாக்கி சுடுதல்:
தோஹாவில் தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில்இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் ககன் நரங், ரகுநாத்,நவ்நிாத் ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
இதேபோல மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தேஜஸ்வினி, சுமா ஷிரூர், அவ்நீத்கெளர் ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
கபடியில் இந்தியா வெற்றி:
ஆடவர் கபடிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் ஜப்பானைசுருட்டியது.
வங்கதேச போட்டியில் 40க்கு 21 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற இந்தியா, ஜப்பானை 44க்கு 25 என்றபுள்ளிகளில் வென்றது. கபடிப் போட்டியில் இந்தியாதான் நடப்புச் சாம்பியன் என்பது நினைவிருக்கலாம்.அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்தியாவின் தங்க வாய்ப்பு பிரகாசமாயகியுள்ளதாகபயிற்சியாளர் பல்வான் சிங் தெரிவித்தார்.
செஸ் போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்கம் கிடைத்தது. கிராண்ட் மாஸ்டர்கள் சசிகிரண்மற்றும் கொனேரு ஹம்பி ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் சுற்றை சாதகமாகதொடங்கியுள்ளனர்.
சசிகிரண் தன்னை எதிர்த்து ஆடிய சிரியா வீரர் இமாத் ஹக்கியுடன் டிரா செய்தார். இதேபோல இன்னொருபோட்டியில் ஈரான் வீரர் எல்ஷான் மொராடிபாடியுடனும் அவர் டிரா செய்தார்.
மற்றொரு போட்டியில், மங்கோலிய வீரர் பட்சுலன் செமேட்டை ஹரிகிருஷ்ணா தோற்கடித்தார்.
மகளிர் பிரிவில், கோனேரு ஹம்பி, வங்கதேச வீராங்கனை சமீமா அக்தரை தோற்கடித்தார். 2வது போட்டியில்வியட்நாம் வீராங்கனை அகுயென் அன் தி தானாவுடன் டிரா செய்தார்.
முதல் நாள் இறுதியில் அணிகளின் பதக்க விவரம்:
சீனா - 16 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம், மொத்தம் 23.
ஜப்பான் - 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம், மொத்தம் 12.
தெ.கொரியா - 1 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலம், மெர்த்தம் 10.
தாய்லாந்து - 2 வெள்ளி, 1 வெண்கலம், மொத்தம் 3.
மங்கோலியா - 1 வெள்ளி, 1 வெண்கலம், மொத்தம் 2.
சிங்கப்பூர் - 1 வெள்ளி, 1 வெண்கலம், மொத்தம் 2.
வியட்நாம் - 1 வெண்கலம், மொத்தம் 1.
ஈரான் - 1 வெண்கலம், மொத்தம் 1.
வட கொரியா - 1 வெண்கலம்.
கஸகஸ்தான் - 3 வெண்கலம்.
இந்தியா - 2 வெண்கலம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications