For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை லாபியோடு திரும்பிய ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வருகைப் பதிவேட்டில்மட்டும் கையெழுத்து போட்டு விட்டு சபைக்குள் வராமல் திரும்பிச் சென்றார்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார்.

அவரை முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் கும்பிடு போட்டுவரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மதிமுக சார்பில் அக்கட்சியின் சட்டசபைத்தலைவர் கண்ணப்பன் வந்து வரவேற்றார்.

ஆனால், சட்டசபை வளாகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப்போட்ட ஜெயலலிதா திரும்பிவிட்டார்.

சட்டசபையை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர்மன்மோகன் சிங், குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், அத்வானிஆகியோருக்கு அதிமுக சார்பில் அழைப்பு அனுப்பியுள்ளோம்.

எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க அனுமதி அளித்தது பாஜக அரசுதான். அதனால்வாஜ்பாய், அத்வானிக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தற்போது மத்தியில்காங்கிரஸ் தலைமையிலான அரசு உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கம் அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே உள்ள அண்ணா சிலை அமைக்க ஏற்பாடுசெய்ததும் அதிமுகதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு பிரசசினையில் முதல்வர்கள் பேசியே தீர்வு ஏற்படவில்லை.இந்த நலையில், அவர்களுக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் பேசி என்ன ஆகப்போகிறது? இது காலதாமதம் செய்வதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமே தவிரவேறொன்றுமில்லை.

நல்ல மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது மதகுகளை இறக்கி 142 அடிஅளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்திருக்கலாம். நமக்கு பொன்னான வாய்ப்புஏற்பட்டது. அதை வீணடிடித்து விட்டார்கள்.

சிபு சோரன் விவகாரம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும்.அவருக்கு ஏன் அமைச்சர் பதவி அளித்தார்கள் என்றே தெரியவில்லை என்றார்ஜெயலலிதா.

அதிமுக வெளிநடப்பு:

இந் நிலையில் சட்டசபையில் வாட் வரி தொடர்பாக அதிமுக எம்எல்ஏசி.வி.சண்முகம் பேசியதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் தந்தார்.

இதையடுத்தும் சண்முகம் பேச அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர்அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X