For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவில்கள் மீதான தாக்குதல் ஒரு சதி-கி.வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:ஸ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திமுக ஆட்சிக்குசிக்கலை ஏற்படுத்தும் வகையில், சிலர் திட்டமிட்டு வழிபாட்டுத் தலங்கள் மீதுதாக்குதல் நடத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதசுவாமி கோவில் முன்பாக வைக்கப்பட்டிருந்தபெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் சிலபகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. சென்னை அயோத்தியாமண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடந்தது.

இந் நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தார்.அங்கு ஏற்கனவே சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்குப் பதில் புதிதாகவைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார் சிலையை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஆட்சி மீது பழி போடநினைப்பவர்கள், திமுக ஆட்சி அமையக் கூடாது என கருதியவர்கள் பெரியார் சிலைவிவகாரத்தை பயன்படுத்தி ஏதோ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதுஎன்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சினையைபயன்படுத்திக் கொண்டு சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு திட்டமிட்டசதிச் செயல் போலவே தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக அவர் விடுத்த அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார்சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்து அவமரியாதை செய்தனர். இந்தசம்பவத்தால் கொதித்துப் போயுள்ள திராவிடர் கழகத்தினர் தங்களது எதிர்ப்புகளைகாட்டி வருகின்றனர்.

இந்த எதிர்ப்புகள் வன்முறையாக மாறியுள்ளது வருத்தம் தருகிறது. இதன் மூலம் திமுகஅரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட தி.க.வினர் முயலக் கூடாது.

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமி ஆலயம் முன்பாக திட்டமிட்டபடி அதே இடத்தில் 16ம்தேதி பெரியாரின் சிலை நிறுவப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவேதொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும், வன்முறைக்குஇடம் தரக்கூடாது என்று கோரியுள்ளார்.

வைகோ கண்டனம்:

பெரியார் சிலை மீது நடந்த தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஸ்ரீரங்கத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தன்மானத் தமிழர்களின்நெஞ்சில் விழுந்த சம்மட்டி அடி ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவருணாசிரமக் கொடுமைகளால் இழிவுற்று ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடிக்கணக்கானமக்களுக்கு விடியலாய் உதித்தவர்தான் தந்தை பெரியார்.

தன்மானம், சுயமரியாதை எனும் சொற்களுக்கு மறு பெயராகவும், இலக்கணமாகவும்திகழ்ந்தவர் அவர். பெரியார் சிலை மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்ட மாபாதகர் யாராகஇருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகை செயல்களுக்கு ஊக்கம் அளிப்போர், திரைமறைவில் இருந்து தூண்டிவிடுவோர் யாராயினும், எவராயினும் நெருப்புடன் விளையாட வேண்டாம்.இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கான வினையை அறுவடை செய்யநேரிடும் , இனி பொறுப்பதற்கில்லை என மதிமுக சார்பில் எச்சரிப்பதாகதெரஹிவித்துள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X