For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலைகள்: அமைதி காக்க தலைவர்கள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:பெரியார் மற்றும் கடவுள் சிலைகளை உடைத்து தமிழகத்தில் வன்முறையை பரப்பும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை சிலர் உடைத்ததால் ஆத்திரமடைந்த தி.க. உள்ளிட்ட சில அமைப்பினர் கடவுள்சிலைகளை உடைக்கும் செயலில் இறங்கினர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளகோவில்களிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தொடர்ந்து நடந்து வரும் இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழக மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. இந்தநிலையில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்ரீரங்கத்தில் பெரியாரின் சிலையை விஷமிகள் சேதப்படுத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. இதன் எதிர் விளைவாக சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன.

பெரியார் சிலையை அவமானப்படுத்திய சக்திகள், அவருக்கும் அவரது கொள்கைளுக்கும், அதைபின்பற்றுபவர்களுக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு விரும்பத்தாகத நிகழ்வுகளை நடத்துவதாக தகவல்கள் வருகின்றன.

திமுக அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிற அரசியல் சக்திகளும் இந்த நிகழ்வைபயன்படுத்திக் கொண்டு வன்முறையைத் தூண்டி விடவும் வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றவும் சதிசெய்கின்றன. இந்த சதியை முறியடித்து அமைதியை நலைநாட்ட காவல்துறை முன்வர வேண்டும் என்றுகூறியுள்ளார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலகாவல்துறை தேவையான விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் செயல்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில, சமூகப் புரட்சியாளரானபெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரலேகா விடுத்துள்ல அறிக்கையில், பழம்பெரும் கோவில் முன்பாக வேண்டும்என்றே பெரியார் சிலையை தி.க. நிறுவியுள்ளது. மீண்டும் அதே இடத்தில் சிலையை நிறுவினால் தேவையில்லாதபதட்டம்தான் உருவாகும். எனவே ஸ்ரீரங்கத்திலேயே வேறு இடத்தில் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சென்னை அயோத்தியா மண்டபத்திற்குச்சென்று அங்கு தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத்தாக்குதலை பாஜகவைத் தவிர பிற கட்சிகள் கண்டிகக்வே இல்லை. இது ஆச்சரியமாக உள்ளது. பெரியார் சிலைதாக்கப்பட்டதை மட்டும் கண்டித்த அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டிக்காதது கண்டனத்துக்குரியதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X