For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகதி மாணவர்களுக்கு சென்னையில் பரீட்சை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ள, தமிழ் மாணவ, மாணவியரின் நலனை முன்னிட்டு சிறப்புதேர்வுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகவந்துள்ளனர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு விட்டு வந்த மாணவ, மாணவியரும் இதில் அடக்கம்.

தற்போது இலங்கையில் ஓ லெவல் பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. இதில் அகதிகளாக வந்துள்ள மாணவ,மாணவியரும் பங்கேற்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அகதிகளாக வந்துள்ள 98 மாணவ,மாணவியருக்கும் சென்னையில் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 45 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு வருடபாடத்தையும் இந்த 45 நாட்களுக்குள் மாணவர்களுக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வுக்கானஹால் டிக்கெட்டுகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் வழங்கப்பட்டன.

டிசம்பர் 11ம் தேதி (நாளை முதல்) 21ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட்டுகள் வழங்கும்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணைத் தூதர் அம்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை கல்வித்துறை,தேசிய நிர்மாணத் துறை மற்றும் தேர்வுத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசும் மிகப் பெரிய அளவில் இதில் பங்காற்றியுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளைநடத்திய ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குற்றாலிங்கம் கூறுகையில், சென்னையில் தேர்வு நடத்துவதற்குத்தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. தேர்வு மையம், தேர்வுக்கண்காணிப்பாளர் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்தில் கல்வி கற்க எந்தவிதத் தடையும் இல்லை. மாநிலத்தில் உள்ளஅனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் அகதி மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்என்றார்.

இலங்கை தேர்வுத் துறை ஆணையர் சனத் புஜிதா கூறுகையில், ஓ லெவல் தேர்வை இந்த ஆண்டு மொத்தம் 5.25லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். சென்னையில் 98 பேர் எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், மதம் மற்றும் பிற பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.தேர்ச்சி பெற குறைந்தது 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். தேர்வு முடிவுகள் 3 மாதங்களில்வெளியாகும். இங்கிருந்தபடியே (சென்னையிலிருந்து) மறு கூட்டல், மறு மதிப்பீடுக்கு மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் தங்களது உயர் கல்வியை தொடரலாம் என்றார்புஜிதா.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழ அகதிகள் புணரமைப்பு கழக பொருளாளர் எஸ்.சி.சந்திரசேகரன் பேசுகையில்,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நலனுக்காக எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது.

தற்போது இந்த சிறப்புத் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி,இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X