For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்துக்களை சூழும் 4 ஆபத்து-ராம.கோபாலன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மதமாற்றம், கோவில் நிலம் அபகரிப்பு உள்ளிட்ட நான்கு வகையான ஆபத்துக்கள் இந்து மதத்தையும்,இந்துக்களையும் சூழ்ந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறக்கூடிய அபாயம் எழுந்துள்ளது என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்து ஒற்றுமை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு ராம. கோபாலன் பேசுகையில்,இந்துக்களுக்கு இந்தியாவில் நான்கு வகையான ஆபத்துக்கள் எழுந்துள்ளன.

மதமாற்றம் இதில் முக்கியமான ஒன்று. இந்துக்கள் தங்கள் பகுதிகளில் மதமாற்றம் நடைபெறுகிறதா என்பதைக்கண்காணிக்க வேண்டும். முன்பை விட இப்போது தீவிரமாக மதமாற்றம் நடந்து வருகிறது.

2வது ஆபத்து அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை. நாடு சுதந்திரம் அடைந்தபோது 3கோடியாக இருந்த முஸ்லீம் மக்கள் தொகை இப்போது 13 கோடியைத் தாண்டி விட்டது.

3வது ஆபத்து இந்துக் கோவில்களின் நிலங்களை அபகரித்து அவற்றை இலவச நிலம் என்ற திட்டத்தின் கீழ்விவசாயிகளுக்குக் கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட கோவில்களுக்குச்சொந்தமாக 6 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடைசி ஆபத்து இடதுசாரி தீவிரவாதம் ஆகும். இந்த ஆபத்துக்கள் குறித்து இந்துக்களிடையே விழிப்புணர்ச்சிஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் இந்துக்கள் இந்தியாவிலேயே சிறுபான்மை சமூகமாக மாறும்ஆபத்தை தவிர்க்கமுடியாது என்றார் ராம.கோபாலன்.

ஞானசேகரன் மீது இ.முன்னணி பாய்ச்சல்:

இந் நிலையில் வேலூர் இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது,

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும்எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இந்து ஆலயங்கள், இந்து மதநிறுவனங்கள், சாமி சிலைகள், ராமர் உருவப்படத்தை அவமதிப்பது, அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துதல்போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இது திகவின் பெயரில் நக்சலைட்டுகள் செய்து வருகிறார்கள் என்ற தகவல்கிடைத்துள்ளது.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த வேலூர்எம்எல்ஏ.ஞானசேகரன் இந்து கோவில்கள் தாக்கப்பட்டதற்கு ஏன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவில்லை. இதற்காக ஞானசேகரனை கடுமையாக கண்டிக்கிறோம்.

இனி அவர் இந்து கோவிலுக்குள் வரக்கூடாது, பரிவட்டங்கள் செய்யக்கூடாது. சர்ச்சுக்கும், மசூதிகளுக்குமட்டுமே செல்லட்டும்.

இந்து ஆலயங்கள், இந்து மத நிறுவனங்கள், சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களை கண்டித்து இந்து முன்னணிசார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும். வேலூர் மாட்டத்தில் கிராம அளவில் கூடபோராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஸ்ரீரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அரசுஅப்புறப்படுத்த வேண்டும். கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதிகளில்உள்ளவர்கள், கோவில் பாதுகாப்பு குழு ஒன்று அமைத்து கோவிலை பாதுகாக்கும வகையில் பணியாற்றவேண்டும்.

இதற்கு எதிர்ப்பு கூறுபவர்களின் உருவ பொம்மையை எரிக்க வேண்டும் என்கிற கருத்தில் எங்களுக்கு உடன்பாடுஇல்லை. எனவே இந்து முன்னணி அமைப்பினர் யாரும் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என அவர் கூறியுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X