For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கக்கன் படத்துக்கு அனுமதி மறுக்கும் காங்கிரஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் உருவப்படம் வைக்க கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அனுமதி மறுத்ததால் அதிருப்தியுள்ளகக்கனின் மகன் பாக்கியநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கக்கன். காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் முதல்வராகஇருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் கக்கன்.எளிமைக்கும், நேர்மைக்கும் இன்றைக்கும் கக்கனைத்தான் உதாரணமாககுறிப்பிடுவார்கள்.

இந்த நிலையில் கக்கனின் உருவப் படத்தை காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானகாமராஜர் அரங்கத்தில் வைக்க அவரது மகன் பாக்கியநாதன் முயற்சித்தார். ஆனால்அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பாக்கியநாதன் இன்று காலை, காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். அவர் கூறுகையில், எனது தந்தை சுதந்திரப்போராட்ட வீரர். எளிமைக்கும், நாணயத்திற்கும், கடமை தவறாத உணர்விற்கும்பெயர் போனவர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் இருந்துள்ளார். நேரு, சாாஸ்திரி, இந்திராகாந்தி, காமராஜர் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

மாநில அமைச்சராக இருந்தபோது மக்களுக்காக உழைத்துள்ளார். அவரை மக்கள்இன்னும் நினைவில் வைத்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, அவரைஅவமரியாதை செய்யும் வகையில், காமராஜர் அரங்கில் கக்கனின் உருவப் படத்தைவைக்க காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அனுமதி தர மறுக்கிறார்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் அனுமதி தர மறுத்து விட்டார். கட்சியின்மேலிடத்திலும் இதுகுறித்து நான் புகார் தெரிவித்தேன். ஆனால் இதுவரை ஒரு பதிலும்வரவில்லை.

எனவேதான் கக்கனை அவமதிக்கும் காங்கிரஸ் தலைமையைக் கண்டித்துகாலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன் என்றார்பாக்கியநாதன்.

கக்கனின் மகன் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதால் சென்னைகாங்கிரஸாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X