For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ நடத்தியது சட்டவிரோத கூட்டம்-எல்ஜிசேலத்தில் 29ல் உண்மையான மதிமுக கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:வைகோ தலைமையில் இன்று நடந்த மதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனஅக்கட்சியின் அவைத் தலைவர் எல். கணேசன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இன்று சென்னையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை வைகோ நடத்தியது சட்டத்திற்கு புறம்பானதாகும். வரும்29ம் தேதி சேலத்தில் நாங்கள் நடத்தப் போகும் கூட்டத்தில் உண்மையான மதிமுக நாங்கள் தான் என தீர்மானம்கொண்டு வரப்படும் என்றார்.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

24.12.2006 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவின் அவைத் தலைவராக நான் நீடிப்பதற்கு தீர்ப்புவழங்கியிருக்கிறது. இந்த நிலையில் 25ம் தேதி (இன்று) என் தலைமை இல்லாமல் மதிமுகவின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டமும், ஆட்சி மன்றக் குழுக் கூட்டமும் நடைபெறுவதாக நான் கேள்விப்பட்டேன்.

மதிமுகவின் சட்டத் திட்டப்படி அவைத் தலைவரான என் தலைமையில் தான் எந்த ஒரு குழுக் கூட்டமும்நடைபெற வேண்டும் என்பதால் அதற்கு வசதியான தேதியை நான் அறிவிக்கும் வரை இக்கூட்டங்களை நடத்தக்கூடாது என்று அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் எல்.ஜி.

சேலத்தில் பொதுக்குழு: செஞ்சி:

இந் நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் கூறுகையில்,

நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி சேலத்தில் வரும் 29ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அவைத்தலைவர் எல்.கணேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். சேலத்தில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில்காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றார்.

சென்னையில் கூட்டம் நடக்கும்: வைகோ

இந் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில், மதிமுகவின்உயர் நிலைக் குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என மதிமுக அமைப்புச் செயலாளரும் வைகோவின்வலது கரமுமான சீமா பஷீர் அறிவித்தார்.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததையடுத்து நேற்று இரவு வழக்கறிஞர்களுடன் வைகோ அவசரஆலோசனை நடத்தினார். நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பின்னர் கட்சியின் அமைப்புச் செயலாளர்சீமா பஷீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் கழக சட்டத் திட்ட விதி 19வது பிரிவு 5ன் கீழ் பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கூட்டுகிற முழு அதிகாரமும், எந்தத் தேதியில் கூட்ட வேண்டும் என்பதை முடிவு செய்யும்அதிகாரமும் கழக சட்டத்திட்டத்தின்படி பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. எனவே திட்டமிட்டபடிடிசம்பர் 25ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை கூட்டம் திட்டமிட்டபடி நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X