For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஸ்துமஸ்-உலகம் முழுவதும் கோலாகலம்

By Staff
Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி:கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் ஆலயத்தில் போப்பாண்டவர் நேற்றுநள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

Pope Benedict XVI waves to children as he celebrates midnight mass in St. Peters Basilica at the Vatican December 25, 2006

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாககொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நேற்றிரவு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள்நடந்தன. இன்றும் நடக்கின்றன.

வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு போப்பண்டவர் சிறப்பு பிரார்த்தனைநடத்தினார். இந்த சிறப்பு பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 20,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனைக்குப் பின் போப் பெனடிக், ஏராளமான குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். பின்பு அவர்தனது உரையில் கூறியதாவது,

குழந்தைகள் நலனை அக்கறை காட்டுங்கள், அவர்கள் மீது அன்பும் மரியாதையும் பரிவும் காட்டுங்கள்,குழந்தைகள் கொடுமைப்படுத்துவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எந்த வித பேதமை இன்றி குழந்தைகள் மீதுஅன்பு செலுத்த வேண்டும் என்பதையே இயேசு போதித்துள்ளார்.

அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு மழை பொழிய இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்வோம். குழந்தைகள்நமக்கு கடவுள் கொடுத்த பரிசு என்றார்.

பெத்லஹேமில்...

அதே போல இயேசு பிரான் அவதரித்த பெத்லஹேம் நகரில் உள்ள தேவாலயத்திலும் சிறப்புபிரார்த்தனைகளுடன் கிறஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் விழாவுக்கு வயது 1852:

கிபி 154ம் ஆண்டு டிசம்பர் 25ல் இயேசு பிறந்ததாகக் கணக்கிடப்பட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்துவங்கின. இதை அன்றைய போப் ஜூலியஸ் சீசர் அறிவித்தவர்.

அவ்வகையில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்துக்கு 1852 வயதாகிறது. ஆரம்பத்தில்அலெக்சாண்டிரியா நாட்டில் மே 20ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. பின்னர் அது ஏப்ரல் மாதத்திற்குமாறியது. பிரிட்டனில் வருடத்தின் முதல் நாளை டிசம்பர் 25ம் தேதியாகக் கொண்டிருந்தனர். அதையேபிற்காலத்தில் இயேசுவின் பிறந்த நாளாகக் கொண்டனர்.

இப்படி மாறி மாறி வந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கிபி 154 முதல் தான் டிசம்பர் 25க்கு மாறியது. ஆனால்,நான்காம் நூற்றாண்டில் தான் இந்த தேதி நிலைப்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய மண் கிறிஸ்துமஸ் தாத்தா:

உலகத்திலேயே மிகப் பெரிய மண்ணால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா சிலையை வடிவமைத்துள்ளார் ஒரிசாமாநிலம் பூரியைச் சேர்ந்த மண் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

மண்ணில் சிலை வடிப்பது மேலை நாடுகளில் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் இத்தகைய மண் சிற்பங்களைதயாரிப்பதில் பிரபலமானவர் சுதர்சன் பட்நாயக். உலக அளவில் இவருக்கு பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.

பூரி ஜெகன்னாதர் ஆலயம், தாஜ்மஹால் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற கட்டடங்களை இவர் மண்ணில் செதுக்கிஅசத்தியுள்ளார். தற்போது கிறிஸ்துமஸையொட்டி பூரி கடற்கரையில், பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தாவை(சான்டா கிளாஸ்) செதுக்கி சாதனை படைத்துள்ளார் பட்நாயக்.

உலகிலேயே மிகப் பெரிய மண் கிறிஸ்துமஸ் தாத்தா சிலை இதுதானாம். இந்த மண் சிற்பம் 100 அடி நீளம், 30அடி அகலம், 15 அடி உயரம் கொண்டதாகும். 1000 டன் மண் இதற்குத் தேவைப்பட்டுள்ளது. சிலையை செதுக்கமொத்தம் 40 மணி நேரம் பிடித்ததாம். அற்புதமான வண்ணங்களையும் இந்த சிலைக்குக் கொடுத்துஉயிரூட்டியுள்ளார் பட்நாயக்.

இந்த பிரமாண்ட கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது. இந்த சிற்பத்தைஉருவாக்கும் பணியில், பட்நாயக் நடத்தி வரும் கோல்டன் சாண்ட் கலை நிறுவனத்தைச் சேர்ந்த 7 இளம்மாணவியர் உள்ளிட்ட 15 மாணவர்கள் பட்நாயக்குக்கு உதவி செய்தனர்.

உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மண் சிற்பக் கலைஞர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்சுதர்சன். அதில் பல பரிசுகளையும் வென்று இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பட்நாயக் செதுக்கியுள்ள இந்த கிறிஸ்துமஸ் தாத்தாவைக் காண பூரி கடற்கரையில் கூட்டம் அலைமோதுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X