புத்தாண்டு கொண்டாட்டம்-காவல்துறை எச்சரிக்கை
சென்னை:சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஹோட்டல்களில் ஆபாச நடனம் ஆடுவது, கிழக்குக்கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்டவை கண்டிப்பாகஅனுமதிக்கப்பட மாட்டாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
2007ம் ஆண்டு பிறப்பதையொட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு சென்னை மாநக>ன் பல்வேறு பகுதிகளில்புத்தாண்டுக் கொண்டாட்டம் களை கட்டும். குறிப்பாக மெரீனா கடற்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும்,கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கிளப்கள், ரிசார்ட்டுகளிலும் கொணாட்டம் உச்சகட்டத்தை எட்டும்.
இதையடுத்து புத்தாண்டு தினக் கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
இரவு 12 மணிக்கு நடன நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் அதுதொடர்பாககாவல்துறையிடம் முன் கூட்டியை நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகள் அனுமதிபெற்றிருக்க வேண்டும்.
ஹோட்டல்களில் கண்டிப்பாக ஆபாச நடனங்கள் இடம் பெறக் கூடாது. வரம்பு மீறும் வகையிலான நிகழ்ச்சிகளும்இருக்கக் கூடாது.
புத்தாண்டு ஸ்பெஷல் என்ற பெயரில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் புளு பிலிம் பிட் படங்கள்காட்ட திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து புறநகர்ப் பகுதி தியேட்டர்களை கண்காணிக்க போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரைச் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் மோட்டார்சைக்கிள்களில் 2 பேருக்கு மேல் செல்லக் கூடாது. அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டக் கூடாது. பலத்தசப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது., பெண்களை கேலி செய்வது, கை குலுக்க முயற்சிப்பதுகூடவே கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மெரீனா, எலியட்ஸ், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை கடற்கரைப்பகுதிகளுக்கு வரும் இளஞ்ஜோடிகள் ஆபாச செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களுக்குப் பெயர் போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடுபடகுத்துறை வரை சுமார் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் 14இடங்களில் தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாட சென்னை மக்கள் தயாராகி வருவதைப் போல, அவர்களை கண்காணிக்ககாவல்துறையும் பிரத்யேக ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications