For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களை விரட்ட இலங்கை மின் நிலையம்!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:கிழக்கு இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சம்பூரில் இந்தியாவின்உதவியுடன் பிரமாண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளது. தமிழர்களை இப்பகுதியை விட்டே ஒட்டுமொத்தமாகவெளியேற்றும் இலங்கை அரசின் சதிச் செயல் இது என தமிழ் எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையின் கிழக்கில் உள்ள சம்பூர், வாகரை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகஇலங்கை அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை படைகளின் தொடர்தாக்குதலால் இங்கு வசித்து வரும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்துவருகின்றனர்.

இலங்கையின் தொடர் தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய சதிச் செயல் இருப்பதுஇப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் தேசிய அணல் மின் கழக உதவியுடன்,சம்பூரில் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை இலங்கை அரசு நிர்மாணிக்கத்திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தே இப்பகுதியில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி விட்டு மின்நிலையத்தை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்முத்தூர் கிழக்கு பிராந்தியத்திலிருந்தும் தமிழர்களை அறவே வெளியேற்ற இலங்கைஅரசு திட்டமிட்டுள்ளது.

மின் நிலையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று கொழும்பில்கையெழுத்தாகிறது. இதில் இந்தியத் தூதர் அலோக் பிரசாத் கலந்து கொள்ளவுள்ளார்.அப்போது 500 மெகாவாட் திறன் கொண்ட அணல் மின் நிலையம் அமைப்பதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்த மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான அனைத்து தொழில்நுட்பஉதவியையும் தேசிய மின் உற்பத்தி கழகம் இலங்கை மின்சார வாரியத்திற்குவழங்கும்.

ஏற்கனவே தெற்கு திரிகோணமலை பிராந்தியத்திலிருந்து 30,000 தமிழர்கள்வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வாகரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.ஆனால் வாகரைப் பகுதியிலும் இலங்கைப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் அங்கிருந்தும் தமிழர்கள் காடுகளுக்குள் தஞ்சமடையும் அவலம்ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தான் விடுதலைப் புலிகள் வசமிருந்த சம்பூரை இலங்கைபடைகள் மீட்டன. சம்பூர் பகுதியில், மின் நிலையம் அமைக்கும் இலங்கை அரசின்திட்டத்திற்கு தமிழ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர்.

இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிகோணமலை எம்.பி.துரைரத்தினசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் பிரதிநிதிகளுடன் கலந்துஆலோசிக்காமல் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் வலுக்கட்டாயமாக இந்தப் பகுதியிலிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கு மின் நிலையம் அமைக்கப்பட்டால்இப்பிராந்தியத்தில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகி விடும். இப்பிராந்தியத்தில் தமிழர்களை அறவே வெளியேற்றும்சதித் திட்டமே இது.

இங்கு வசிக்கும் தமிழர்களை வெளியேற்றவே இந்த திட்டத்தை இலங்கை அரசுகொண்டு வந்துள்ளது. இதை மனதில் வைத்தே, அரசியல் உள்நோக்கத்துடன் கூடியராணுவத் தாக்குதலை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசு தொடங்கியது.

தெற்கு திரிகோணமலை, வடக்கு மட்டக்களப்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்து அப்பகுதியைகைப்பற்றும் திட்டமே இது.

இலங்கை அரசின் சதித் திட்டத்தால் இதுவரை 30,000 தமிழர்கள் இடம் பெயர்ந்துவிட்டனர். சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, சுடைகுடா, இலக்கந்தை,பட்டலிபுரம், கூந்தீவு உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த தமிழர்கள் அங்கிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கையின் முதல் அணல் மின் நிலையம் சீன அரசின் உதவியுடன்,புத்தளம் மாவட்டம் நொரச்சோலையில் அமைக்கபப்ட்டுள்ளது. அப்பகுதி மக்களின்கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திரிகோணமலையில், 99 எண்ணை சேமிப்புக் கிடங்குகளை இந்தியன்ஆயில் கார்பரேஷன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இவை இரண்டாம் உலகப்போரின்போது விடப்பட்டவை ஆகும்.

திரிகோணமலையில் இந்தியாவை அதிக அளவில் முதலீடு செய்ய வைப்பதன் மூலம்விடுதலைப் புலிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்ற இலங்கைஅரசின் உள்நோக்கத்தின் காரணமாகவே இந்திய நிறுவனங்களை அதிக அளவில்திரிகோணமலையில் நிலை கொள்ள வைக்கிறது இலங்கை அரசு என்று கூறியுள்ளார்துரைரத்தின சிங்கம்.

கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய தொழில்துறை அமைச்சர் ரோஹிதபொகொல்லகாமா மற்றும் தேசிய அணல் மின் கழக அதிகாரிகள் நடத்தியபேச்சுவார்த்தையின்போது சீனகுடா பகுதியில் இந்த மின் கழகத்தை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் இந்த இடத்தில் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தால், மின் நிலையத்தின்நீண்ட புகைக் கூண்டுகள், அருகில் உள்ள விமானப்படை விமான நிலையத்திற்குஇடையூறாக அமையும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து இந்த இடத்தில் மின் நிலையம் அமைப்பதை இலங்கை அரசுகைவிட்டது. ஆனால் உண்மையில் இப்பகுதிக்கு அருகே உள்ள சிங்களப் பகுதியானகாந்தளை மக்களின் எதிர்ப்பு காரணமாகவே இங்கு மின் நிலையம் அமைக்கும்முயற்சி கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தமிழர்கள் வசிக்கும் பகுதியான சம்பூரில் இந்த மின்நிலையத்தை அமைக்க கடந்த அக்டோபர் மாதம் இலங்கை மின்சாரத் துறை முடிவுசெய்தது.

இங்கு மின் நிலையத்தை அமைப்பதன் மூலம் தமிழர் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசைஏற்படும், கடல் பகுதியில் மாசு நீர் கலப்பதால் தமிழ் மீனவர்களின் வாழ்க்கைபாதிக்கப்படும், எனவே இங்கு இந்த மின் நிலையத்தை அமைக்கக் கூடாது என தமிழ்எம்.பிக்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை இலங்கை அரசுகண்டுகொள்ளவில்லை.

தமிழர் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்துமின் நிலையத்தை அமைக்க இலங்கை அரசு தீவிரமாக செயல்படுவதாக தமிழர்கள்மத்தியில் கருத்து நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X