For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரத்தை விட்டார் மம்தா பானர்ஜி!

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டதலைவர்களின் கோரிக்கையை ஏற்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிதனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்டவிவசாயிகளின் நிலங்களை மீண்டும் அவர்களுக்குத் திரும்ப வழங்கக் கோரிகொல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் மம்தா.

நேற்று அவரது போராட்டம் 25வது நாளை தொட்டது. செவ்வாய்க்கிழமை முதல்மம்தாவின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. அவருக்கு ஆக்சிஜன்செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை அவரது ரத்த அழுத்தம்குறைய ஆரம்பித்தது. அவரது நிலை மேலும் மோசமடைந்து வந்தது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவர்அப்துல் கலாமை நேற்று மாலை சந்தித்துப் பேசினர். மம்தா விவகாரத்தில் தலையிட்டுஅவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலாமை கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மம்தா பானர்ஜியின் கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த விவகாரத்துக்குத்தீர்வு கண்டு மம்தா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதேபோல மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடனும் கலாம்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கமாநில அரசின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாலையில் நடந்தது. இதில்தொழில்துறை, வீட்டு வசதித் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது போராட்டத்தைக் கைவிடும்படி மீண்டும் கோரிக்கை விடுப்பது,மம்தாவின் கோரிக்கைகளை பரிசீலிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு அடங்கிய கடிதத்தை முதல்வரின் சிறப்புச் செயலாளர் மம்தாவிடம்நேரில் சேர்ப்பித்தார். முதல்வரின் கடிதம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து நள்ளிரவுவாக்கில் தனது போராட்டத்தைக் கைவிட மம்தா முடிவுசெய்தார். இதுதொடர்பாக அவர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம்பேசுகையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்கள்வேண்டுகோளுக்கிணங்க எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்.

எனது உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக உடனடியாக மருத்துவமனைக்குசெல்கிறேன்.

இன்று இரவு (நேற்று) பிரதமரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. அதில்,மருத்துவமனையில் சேர்ந்து உடல் நலத்தை தேற்றிக் கொண்ட பின்னர் சிங்கூர் நிலவிவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனபிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்ஆகியோரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து எனது போராட்டத்தைவிலக்கிக் கொள்கிறேன்.

இருப்பினும் விவசாயிகளுக்கான எனது போராட்டம் தொடரும். விவசாயிகள்மீண்டும் தங்களது நிலங்களைப் பெறும் வரை போராடுவோம் என்றார் மம்தா.இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இதன் மூலம் 25 நாள் பரபரப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப்பேசினார். மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றுக்காக தொடர்ந்து போராடவேண்டியுள்ளது, எனவே உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.

வைகோவுடன், மம்தா சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுசிங்கூர் விவசாயிகள் வழங்கிய பிரமாணப் பத்திரத்தை வைகோவிடம் மம்தாகாட்டினார். மேலும் தன்னைக் காண சென்னையிலிருந்து வந்ததற்காக மம்தா,வைகோவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X