For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா எச்சரித்தாரா? வைகோ பலே பல்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:எனக்கு எதிரானவர்களுக்கு (கருணாநிதிக்கு) சோனியா எச்சரிக்கை விடுத்ததாக நான் கூறவே இல்லை எனவைகோ பல்டி அடித்துள்ளார்.

மதிமுக விவகாரத்தில் தலையிட வேண்டாம் என திமுக தலைமைக்கு சோனியாவோ பிரதமரோ எச்சரிக்கை ஏதும்விடுக்கவில்லை என்றும் இது தொடர்பாக வைகோ கூறியுள்ள கருத்து உண்மையானதல்ல என்றும் காங்கிரஸ்தரப்பில் இருந்து வைகோவுக்கு நெத்தியடி தரப்பட்டதையடுத்து இன்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளா.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

25ம் தேதி தாயகத்தில் நடந்த கூட்டத்தின்போது கலவரம் செய்து உள்ளே நுழைந்து கட்சி அலுவலகத்தைகைப்பற்றும் முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இது குறித்து செய்தியாளரிடம் நான் அளித்தபேட்டியின்போது கூறியது என்னவென்றால், பிரதமருக்கும் சோனியாவுக்கும் நான் அனுப்பிய பேக்ஸ் கடிதங்கள்அவர்களது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிகிறேன்.

எங்கள் இயக்கத்துக்கு உள்ளே குழப்பம் விளைவிக்கும் செயல்களை அவர்கள் விரும்பவில்லை என்றும்அறிகிறேன். தாயகத்தில் கலவரம் செய்து எங்கள் மீது தாக்குதல் நடத்தி கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சிகடைசி நேரத்தில் கைவிடப்பட்டதற்கு ஒரு வேளை டெல்லியில் இருந்து ஏதாவது தகவல் வந்திருக்கலாம் என்றுகூறினேன்.

ஆனால், அந்த செய்தியாளர் தனது ஆர்வத்தின் காரணமாக வெளியிட்ட செய்தியில் டெல்லியில் இருந்து இருதலைவர்களிடம் இருந்து எனக்கே தகவல் வந்தது போன்றும் எனக்கு எதிரானவர்களுக்கு சோனியா அம்மையார்எச்சரிக்கை விடுத்ததாக நான் கூறியதாகவும் வெளியாகிய வார்த்தைகளை நான் கூறவில்லை.

இது குறித்து வேறு எந்த செய்தியாளரிடமும் நான் எதுவும் கூறவும் இல்லை. நேற்று பிரதமரை சந்தித்தபோதுஎன்ன பேசினேன் என்பதையும் யாரிடமும் கூறவில்லை.

ஆனால், மதிமுகவை எந்த விதத்திலாவது முடக்க வேண்டும் என முதல்வர் செயல்பட்டு வருவதால் அந்தசெய்தியாளருக்கு நான் அளித்த பேட்டியை தனது நோக்கத்துக்கு பயன்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ள வைகோ, தனது இந்த விளக்கத்தை பிரதமருக்கும் சோனியாவுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பொதுகுழு உறுப்பினர்களுக்கு லஞ்சம்:

இதற்கிடையே ஒவ்வொரு மதிமுக பொதுக்குழு உறுப்பினருக்கும் ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தும், போலீசாரை வைத்தும்எல்.கணேசன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுக மிரட்டுகிறது என வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுகவை நிர்மூலம் செய்து விட வேண்டும் என்ற எதேச்சதிகார வெறியோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் கட்சிக்கு துரோகம் செய்தமாஜிகள் இருவர் சேலத்தில் நடத்துகின்ற கூட்டத்துக்கு ஆள் பிடித்து அனுப்புகிற வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு பொதுக்குழு உருப்பினருக்கும் ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொடுக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு ஆசைப்படாத பொதுக்குழுஉறுப்பினர்களை போலீஸை வைத்து மிரட்டுகிறார்கள்.

இந்த அக்கிரமச் செயலை போலீஸ் அதிகாரிகள் நேரடியாகவே மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினரின் வீட்டுக்கும் சென்றுசேலம் கூட்டத்துக்குப் போங்கள். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம், தொழில் நடத்த முடியாது என்றுமிரட்டுகிறார்கள்.

தமிழக வரலாற்ளில் இப்படிப்பட்ட அராஜகத்திலும், அக்கிரமத்திலும் எந்த ஒரு கட்சியும், அரசும் இதுவரை ஈடுபட்டதில்லை. இந்த அநீதியையும்,கேடுகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த அறிக்கை.

நடப்பது மதிமுகவுக்குத்தானே என்று கருதாமல் ஜனநாயக உணர்வுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அநீதியைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்றுகூறியுள்ளார் வைகோ.

எல்ஜிக்கு வைகோ வைத்த செக்:

சேலத்தில் நடந்த போட்டி பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளாமல் தடுக்க நேற்று தமிழகம் முழுவதும் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தைநடத்திய வைகோ அவர்களை அதே திருமண மண்டபங்களில் தொடர்ந்து இன்றுகாலை வரை "எல்லா வசதிகளுடன் தங்க வைத்தார்.

இவர்களை கண்காணிக்கும் வேலையில் மாவட்ட செயலர்கள் ஈடுபட்டனர். நேற்றுஇரவு அவர்களுக்கு விடிய, விடிய பாதுகாப்பும் தரப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X