விஜய் நம்பியாருக்கு ஐ.நா.வில் புதுப் பதவி
நியூயார்க்:ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியில் இன்று பான் கி மூன் பொறுப்பேற்கிறார். மேலும்கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக இருந்த இந்தியாவின் விஜய் நம்பியார்,ஐ.நா. சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்து வந்த கோபி அன்னானின் பதவிக்காலம்முடிந்ததைத் தொடர்ந்து புதிய பொதுச் செயலாளராக தென் கொரிய வெளியுறவுஅமைச்சர் பான் கி மூன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 14ம் தேதி பான் கி மூன் புதிய பொதுச் செயலாளராக பதவிப்பிரமாணம்எடுத்துக் கொண்டார். இருப்பினும் நேற்று வரை அன்னானின் பதவிக்காலம் இருந்தது.இன்று முதல் பான் கி மூன் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன் பான் கி மூன் சில முக்கியநியமனங்களை அறிவித்துள்ளார். கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக இருந்தஇந்தியாவின் விஜய் நம்பியார், ஐ.நா. சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகநியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நம்பியார் முன்பு பதவிவகித்துள்ளார். ஐ.நா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஆப்கானிஸ்தான்ஆகியவற்றுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஹைதி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் மோன்டாஸ், செய்தித் தொடர்புப் பிரிவுதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிக்கையாளரான மோன்டாஸ், ஹைதியில்வானொலி நிலையம் நடத்தி வந்தவரும், படுகொலை செய்யப்பட்டுவருமான ஜீன்டோமினிக்கின் மனைவி ஆவார்.
நிர்வாகப் பிரிவு இணைச் செயலாளராக மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அலிஸியாபார்சினோ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இப்பதவிஅமெரிக்காவிடம் இருந்தது.
பான் கி மூன் நிர்வாகத்தில், அமைதி காப்பு மற்றும் அரசியல் விவகாரப் பிரிவுஇணைச் செயலாளர் பதவியை அமெரிக்கா கோரியுள்ளதாக தெரிகிறது.
முக்கியப் பதவியான துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரை பான் நியமிக்ககப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. ஐரோப்பியசெயல்பாடுகளுக்கான பொறுப்பு ரஷியாவிடமே தொடர்ந்து நீடிக்கும் எனத்தெரிகிறது.
பொருளாதரம் மற்றும் சமூக விவகாரத்திற்கான இணைச் செயலாளர் பதவிக்கு சீனாகுறி வைத்துள்ளது. அதற்கே கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியப் பொருப்புகளைப் பிடிக்க பல நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.அரசியல் விவகாரத்துறைக்கு மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவைமுயலுகின்றன. அமைதிகாப்புப் பிரிவு பொறுப்பை பிடிக்க அமெரிக்க, இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடும் போட்டியில் உள்ளன.
பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அன்னான் தனது மனைவி நானேவுடன் ஜெனீவாசெல்கிறார். அங்கு சிறிது காலம் ஓய்வெடுக்கும் அவர் பின்னர் ஆப்பிரிக்க விவசாயக்கழகத்தை நிறுவி, விவசாயிகளுக்காக உழைக்கத் திட்டமிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications