கேவலமாக விளையாடும் இந்தியா-வெங்சர்க்கார்
கேப்டவுன்:இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் படு மோசமாக உள்ளது. முன்னணிஆட்டக்காரர்களால் 70 ஓவர்கள் கூட தாக்குப் பிடியாதது கேவலமானது என்று இந்தியகிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவரும், முன்னாள் கேப்டனுமான வெங்சர்க்கார்கூறியுள்ளார்.
இந்திய அணிக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இன்று கேப்டவுனில் 3வது டெஸ்ட்போட்டி நடைபெறவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒருபோட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளதால், இந்தப் போட்டியில் வெல்லும்அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருப்பதாக வெங்சர்க்கார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேப்டவுனில் அவர் கூறுகையில்,
இந்திய பேட்ஸ்மென்களால் 70 ஓவர் கூட தாக்குப் பிடிக்க முடியாதது அதிர்ச்சியாகஇருக்கிறது. அவர்கள் சரியாக விளையாடியிருந்தால் 2வது டெஸ்ட் போட்டியில்தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.
இந்திய பேட்ஸ்மென்களின் ஆட்டம் பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. இதுமிகவும் கேவலமானது.
தற்போதைய இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக விளையாடுகிறார்கள்(வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழுதான் இந்த அணியை தேர்வு செய்தது!).
குறிப்பாக வீரேந்திர ஷேவாக் படு மோசமாக விளையாடுகிறார். அணிக்கு இதுபெரும் கவலையாக உள்ளது. 3வது போட்டியில் தொடக்க ஆட்ட வரிசை மாறுமாஎன்பதை நான் சொல்ல முடியாது.
இந்தத் தொடரில் ஷேவாக் மோசமாக விளையாடினார் என்பதை மட்டுமே என்னால்சொல்ல முடியும் என்றார் வெங் சர்க்கார்.
டிராவிடுக்கு சறுக்கல்:
இதற்கிடையே ஐசிசி தர வரிசைப் பட்டியலில் கேப்டன் ராகுல் டிராவிட் 3 ரேங்குகள்குறைந்து 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் இதுவரை 49 ரன்களை மட்டுமே எடுத்துள்ள டிராவிட்தற்போது 4வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
இலங்கை வீரர் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹூசேஆகியோர் டிராவிடை பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறியுள்ளனர்.
ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், பாகிஸ்தானின் முகம்மது யூசுப் 2வது இடத்திலும்,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சில் இலங்கையின் முரளீதரன் முதல் இடத்தில் தொடருகிறார். 2வதுஇடத்திற்கு தென் ஆப்பிரிக்காவின் டினி முன்னேறியுள்ளார். மெக்கிராத் 3வதுஇடத்திலும், ஷான் வார்னே 4வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் ஸ்ரீசாந்த் முதல் 30 இடங்களுக்குள் முதல் முறையாக நுழைந்துள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் ஜேக்கஸ் கல்லிஸ் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதுஇடத்தில் ஷான் போலாக், 3வது இடத்தில் பிளின்டாப் உள்ளனர்.












Click it and Unblock the Notifications