தீவிரவாதிகள்ஹிட் லிஸ்ட்: 3வது இடத்தில் தாஜ்
டெல்லி:தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் தாஜ்மஹால் 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மும்பை தாரப்பூர் அணுமின் நிலையம் உள்ளது.
இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த உள் கட்டமைப்புகள்,இடங்கள் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவை நிலைகுலைய வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்தியஉளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் முக்கியமான 10 இடங்கள் பட்டியலை தீவிரவாதிகள் தயாரித்திருப்பதாகவும், அவற்றைபடிப்படியாக தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் டாப் டென் பட்டியலில்மும்பை தாராப்பூர் அணு மின் நிலையம் மற்றும் நாட்டின் பிற அணு மின் நிலையங்கள் முதலிடத்தில் உள்ளன.நாடாளுமன்றம் 2 வது இடத்தில் உள்ளது. தாஜ்மஹால் 3வது இடத்தில் இருக்கிறது.
காசி விஸ்வநாதர் கோவில் 4வது இடத்திலும், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் 5வது இடத்திலும்உள்ளன.
தலைவர்களைப் பொறுத்தவரை சோனியா காந்தியை முதலிடத்தில் வைத்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்,குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராகுல்காந்தி, எல்.கே.அத்வானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில்உள்ளனர்.
கடந்த மாதம் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய தீவிரவாதிகள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கியத் தலங்கள், அணு மின் நிலையங்கள், விமான நிலையங்களுக்குபாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications