திருமா., சத்யராஜுக்கு இன்று அரசு விருது
சென்னை:விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள அரசுவிருதுகளை முதல்வர் கருணாநிதி இன்று வழங்குகிறார்.
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முனைவர் க.ப.அறவாணனுக்கும், தந்தை பெரியார்விருது நடிகர் சத்யராஜுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், அறிஞர் அண்ணாவிருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர பெருந்தலைவர் காமராசர் விருது முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கும், மகாகவிபாரதியார் விருது தமிழறிஞர் தமிழருவி மணியனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பேராசிரியர்கா.செல்லப்பனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும் வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர்கருணாநிதி விருதுகளை வழங்கி ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரத்தை விருது பெறுவோரிடம்அளிக்கிறார்.












Click it and Unblock the Notifications