ஒரு படி முன்னேறினார் சானியா மிர்ஸா!
டெல்லி:சர்வதேச மகளிர் டென்னிஸ் தரப் பட்டியலில் சானியா மிர்ஸா ஒரு படி முன்னேறி 65வது இடத்திற்குஉயர்ந்துள்ளார்.
20 வயதாகும் இந்தியாவின் சானியா மிர்ஸா சர்வதேச டென்னிஸ் அரங்கில் கடந்த 2005ம் ஆண்டு மிகச்சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் உலக தர வரிசைப் பட்டியலில்31வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.ஆனால் கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தார். ஆண்டு இறுதியில் அவர்66வது ரேங்குக்குத் தள்ளப்பட்டார்.
இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இழந்த பெருமையை மீட்பேன் என சானியா உறுதி அளித்திருந்தார். இதைநிரூபிப்பது போல கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கிய ஹாப்மேன் டென்னிஸ்போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் அபாரமாக ஆடினார் சானியா.
அவரும் இந்தியாவின் ரோகன் போபண்ணாவும் இணைந்து அரை இறுதிப் போட்டி வரை முன்னேறினர். அரைஇறுதியில் ஸ்வீடனிடம் சானியா-போபண்ணா ஜோடி தோல்வியுற்றது. இருப்பினும் சுற்றுப் போட்டிகளில் செக்,குரோஷிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது சானியா ஜோடி.
ஹாப்மேன் டென்னிஸ் தொட>ல் சானியா சிறப்பாக விளையாடியதால் தர வரிசையில் ஒரு படி முன்னேறி 65வதுஇடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்த வாரம் சானியா ஹோபர்ட் சர்வதேச போட்டியில் பங்கேற்கிறார். இதையடுத்து15ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் அவர் கலந்து கொள்கிறார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான ஷிகா ஓபராய் 2 இடங்கள் சறுக்கி 208வது இடத்திற்கு பின்னேறியுள்ளார்.அங்கிதா பாம்ப்பிர 414வது இடத்திலும், இஷா லக்கானி 422வது இடத்திலும், ருஷ்மி சக்கரவர்த்தி 423வதுஇடத்திலும் உள்ளனர்.
மகளிர் டென்னிஸ் தர வரிசையில் பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் முதலிடத்தில் உள்ளார். 2வதுஇடத்தில் மரியா ஷரபோவாவும், 3வது இடத்தில் பிரான்ஸின் அமலி மரீஸ்மோவும் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications