பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறையும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல், டீசலின் விலையை மீண்டும்குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த நவம்பரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை 1 ரூபாயும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்தால் மீண்டும் பெட்ரோலிய பொருட்களின விலைகுறைக்கப்படும் என பெட்ரோலியத்துறை செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
இப்போது ஒரு பாரல் கச்சா எண்ணெயின் விலை 53 டாலராக குறைந்துள்ளது. தொடர்ந்து விலை சரிந்துவருகிறது. இந்த விலை 50 டாலரை எட்டியவுடன் விலை குறைப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications