தமிழ் ஹோம் வீடியோ துறையில் மோசெர் பெர்!
சென்னை:உலகின் 2வது மிகப் பெரிய ஆப்டிகல் ஸ்டோரேஜ் தயாரிப்பு நிறுவனமான மோசெர் பெர் (Moser Baer) தமிழகத்தில்ஹோம் வீடியோ துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
முதல்கட்டமாக 101 தமிழ் படங்களின் டிவிடி, விசிடிக்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த டிவிடிக்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும்முக்கியமான ரீடைல் கடைகளில் இந்த டிவிடி, விசிடிக்கள் கிடைக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய மோசெர் பெர் நிறுவனத்தின் பொழுதுபோக்கு வர்த்தகப் பிரிவின் தலைமை செயல் அதிகாரிஹரிஷ் தயானி, தயாரிப்பாளர்களின் முறையாக அனுமதியோடு இந்த சிடி, டிவிடிக்கள் வெளியிடப்படும். மிகச்சிறப்பான வீடியோ தரம் கொண்டவையாக இவை இருக்கும். அதே நேரத்தில் விலையும் குறைவாகவேஇருக்கும்.
இந்த நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் ரிதுல் பூரி பேசுகையில், தமிழகத்தில் 41 வினியோகஸ்தர்களைநியமித்துள்ளோம். இதன் மூலம் 7,000க்கும் அதிகமான கடைகளில் எங்கள் டிவிடி, சிடிக்கள் கிடைக்கும்.
இந்திய மொழிகளில் தயாரான சுமார் 7,000 படங்களின் காப்பிரைட் உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். பேச்சு இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றார்.
இந்தியாவில் 26 மில்லியன் டிவிடி, விசிடி உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், இது ஆண்டுதோறும் 25 சதவீதம்வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications