பஸ் டிரைவருக்கு கலெக்டர் உருவில் வந்த ஏழரை
புதுக்கோட்டை:புதுக்கோட்டை கலெக்டரின் காருக்கு வழிவிடாமல் சென்ற தனியார் பஸ் டிரைவர் மீதுபல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பி.எல்.ஏ. என்ற தனியார் பஸ் புது பஸ்ஸ்டாண்டிலிருந்து கிளம்பியது. பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்த இந்த பஸ்சைபின்தொடர்ந்து அலுவலகத்துக்கு செல்வதற்காக கலெக்டர் எஸ்.ஜே.சிருவின் கார்வந்து சென்றது.
பயணிகளை ஏற்றுவதற்காக பஸ்ஸை நடு ரோட்டில் நிறுத்தினார் பஸ் டிரைவர்சண்முகம் (வயது 35). இதையடுத்து பஸ்சை முந்தி செல்வதற்காக கலெக்டரின் கார்டிரைவர் பல முறை ஹாரன் அடித்தார்.
ஆனால், அதை காதிலேயே வாங்காத சண்முகம் பஸ்ஸை நகர்த்தவே இல்லை.இருந்தாலும் கலெக்டர் பொறுமை காத்தார். பின்னர் ஒரு வழியாக பஸ் கிளம்பியது.அப்போதும் கலெக்டரின் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டில் பஸ் சென்றது.
ஒரு மீட்டிங் விஷயமாக அவசரமாக போக வேண்டிய நிலையில் கலெக்டர்இருந்ததால், அவரது கார் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து முந்திச் செல்ல வழிகேட்டார். ஆனால், பஸ் டிரைவர் வழி விடவே இல்லை.
கிட்டத்தட்ட 2 கி.மீ. வரை கலெக்டரின் காருக்கு வழி விடாமல் ஜகா தந்தவாரேசென்றார்.
ஒரு வழியாக அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா அருகில் பஸ்சை தாண்டியதுகலெக்டரின் கார். இதையடுத்து பஸ்ஸை வழிமறித்து காரை நிறுத்தச் சொன்னார்கலெக்டர்.
சிவப்பு லைட் சுழல் கார் தனது பஸ்ஸை வழி மறித்ததைப் பார்த்து அதிர்ந்த சண்முகம்பஸ்சிலிருந்து இறங்கி கலெக்டரிடம் ஓடி வந்தார்.
அவரிடம் லைசன்சை காண்பிக்குமாறு கலெக்டர் கேட்க, அது இல்ல சார், எங்க பஸ்ஓனர்கிட்ட இருக்கு என்றார். ஒரிஜினல் இல்லாவிட்டால் பரவாயில்லை, ஜெராக்ஸைகாட்டு என்று கலெக்டர் கேட்க, அதுவும் இல்ல சார் என்று வழிந்தார்.
இதையடுத்து மாவட்ட போக்குவரத்து அதிகாரியை (ஆர்டிஓ) செல்போனில் பிடித்தகலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்ச ஆ.டி.ஓ. ராஜ்குமார், பஸ் டிரைவரிடம் விசாரணைமேற்கொண்டார். பின்னர் போக்குவரத்து போலீசாரை வரவழைத்து அவர் மீதுநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சண்முகம் பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வளவு சங்காத்தம் நடந்தபோது டிரைவர் இல்லாமல் பயணிகளுடன் பஸ்நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து மாற்று டிரைவர் வந்து பஸ்ஸையும் பயணிகளையும் மீட்டுச் சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications