விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்தது!
Subscribe to Oneindia Tamil
போபால்:மும்பையிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் (இப்போது இந்தியன்) விமானம் போபால் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தால் எந்த விபத்தும்ஏற்படவில்லை.
92 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் இன்று காலை 8.10 மணிக்கு போபாலில்தரையிறங்கியது. ஓடுபாதையில் ஓடி விமானத்தின் வேகம் குறைந்து, விமானம் நிற்கும்போகும் நிலையில் டயர்வெடித்தது.
இதையடுத்து அந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது. டயரை மாற்ற டெல்லியில் இருந்து தான்ஊழியர்களும் ஸ்பேர் பார்ட்சும் வர வேண்டியிருந்ததால் பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications