ஈரானுக்கு ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள்!
மாஸ்கோ:ஈரானுக்கு அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது.மேலும் ஈரானின் தற்காப்புக்காக கூடுதலாக ஆயுதங்கள் வழங்கவும் தயாராகஇருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான்ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந் நாட்டின் மீது ராணுவ தொழில்நுட்பத் தடைகளை ஐ.நா.மூலம் பிறப்பித்தது அமெரிக்கா.
![]() |
இருப்பினும் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான உதவிகளைப் பெற மட்டுமேஈரானுக்கு இந்தத் தடை இடைஞ்சலாக உள்ளது.
இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்க அமெரிக்காதிட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைவழங்கியுள்ளது ரஷ்யா. மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய இவானோவ்இதுகுறித்துக் கூறுகையில்,
![]() |
அதி நவீன குறுகிய தொலைவு விமான எதிர்ப்பு டிஓஆர்-எம்1 ரக ஏவுகணைகளைஈரானுக்கு வழங்கியுள்ளோம்.
ஆயுதங்கள் வாங்குவதற்கு ஈரானுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆயுதங்களைஈரானுக்குக் கொடுக்கவும் எந்தத் தடையும் இல்லை. எனவேதான் ஈரானுக்கு நாங்கள்ஏவுகணைகளைக் கொடுத்துள்ளோம். இதில் தவறு ஒன்றும் இல்லை.
ஈரான் தனது பாதுகாப்பு படையை பலப்படுத்த விரும்புகிறது. அதற்கு நாங்கள்உதவுவோம். தற்போது கொடுத்துள்ள ஏவுகணைகள் தவிர கூடுதலாக ஆயுதங்கள்கேட்டால் அதையும் ரஷியா நிறைவேற்றும் என்றார் இவனோவ்.
ரஷ்யாவிடமிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகள் உள்ளிட்டஆயுதங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே முதல்கட்டமாக ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களைக் கொண்டு அண்டைநாடுகளை ஈரான் தாக்க்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக இரு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.
ஈரான் மீதான ஐ.நா. தடைக்கு ஆரம்பத்தில் ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்ததடையில் பல திருத்தங்களை அது தெரிவித்தது. வேறு வழியில்லாமல் இந்ததிருத்தங்களை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதன் பிறகே ரஷ்யா தடைதீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது நினைவிருக்கலாம்.
ஈரானுக்கான ஏவுகணை உதவி குறித்து ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவிக்கையில், வான்வெளித் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளஈரானுக்கு இந்த ஏவுகணைகள் உதவும். இதன் மூலம் அண்டை நாடுகளை ஈரான்தாக்கும் என்று கணிப்பது தவறானது என்றனர்.
கடந்த ஆண்டு எஸ்.300 ரக நீண்ட தொலைவு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைஈரானுக்கு ரஷ்யா தருவதாக இருந்தது. ஆனால் அதை கடைசி நேரத்தில் வாபஸ்பெற்றுக் கொண்டது.
இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு ஆயுத ஏற்றுமதி நிறுவனங்கள்ஈரானுக்கும், சிரியாவுக்கும் ஆயுதங்களை கொடுப்பதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications