போர்ட்டை ஓவர்டேக் செய்யும் டொயோடா
டோக்கியோ:பொருளாதாரரீதியில் தடுமாறி வரும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம்விரும்பினால், அந்த நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட தாங்கள்தயாராக இருப்பதாக ஜப்பானின் டொயட்டோ நிறுவன தலைவர் கடாசுகி வட்டனாபேகூறியுள்ளார்.
நிக்கி பிசினஸ் இதழுக்கு வட்டனாபே அளித்துள்ள பேட்டியில் இதைத்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும்வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதுமிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.இருப்பினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஃபோர்டுதான். கூட்டுச்செயல்பாடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என்றார்.
ஆனால் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உத்தேசித்துள்ளதாகவேகூறப்படுகிறது. இதற்கான முதல் கட்டமாக இரு நிறுவனங்களின் தலைவர்களும்சந்தித்துப் பேசியுள்ளதாகவும் நிக்கி இதழ் தெரிவிக்கிறது.
தற்போது டொயட்டோ நிறுவனத்தின் எஸ்கேப், மரைனர் ஆகிய வாகனங்களின்என்ஜினுக்கான உதிரி பாகங்கள் சிலவற்றின் தொழில்நுட்ப உரிமத்தை ஃபோர்டுவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்டு பொருளாதார ரீதியாக தற்போது தடுமாற்றத்தில் உள்ளது.டொயட்டோவுடன் இணைந்து செயல்பட்டால்தான் பேரிழப்பிலிருந்து அது மீளமுடியும் என மோட்டார் வாகனத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதே போல இதற்கிடையே, உலகின் முன்னணி மோட்டார் நிறுவனமானஅமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் நிறுவனத்தையும் வியாபாரரீதியில் டொயட்டோமிரட்டி வருகிறது.
அமெரிக்க கார் சந்தையில் முதலிரண்டு இடங்களில் உள்ள ஜி.எம், போர்ட்நிறுவனங்களை மிக விரைவில் டோயோடோ ஓவர் டேக் செய்யவுள்ளது.
இது ஒரு புறம் இருக்க மலேசிய அரசுக்குச் சொந்தமான புரோட்டான் கார்நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முயன்றுவருகிறது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கிடையே பேச்சுக்கள் நடந்துவருகின்றன.
இதேபோல, பிரான்ஸின் பிஎஸ்ஏ பியூஜியட் சிட்ரோன் மற்றும் ஜெர்மனியின்வாக்ஸ்வோகன் நிறுவனங்களும் புரோட்டானின் பங்குகளை வாங்க ஆர்வம்காட்டியுள்ளதாக மலேசிய நிதியமைச்சர் நூர் முகம்மது யாக்கூப் தெரிவித்துள்ளார்.
புரோட்டான் நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 2.85 டாலர்கள் (மலேசிய மதிப்பில் 10ரிங்கிட்டுகள்) வரை தர ஜெனரல் மோட்டார்ஸ் முன் வந்துள்ளதாகமலேசியாவிலிருந்து வெளியாகும் பிசினஸ் டைம்ஸ் நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது.
போர்டைப் போலவே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் அமெரிக்க சந்தையில்இறங்கு முகம்தான். அதேசமயம், உலகின் பிற பகுதிகளில் இதன் மார்க்கெட்வலுவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனைவருவாய் 55 சதவீதமாக இருந்தது. அதேசமயம் 2005ம் ஆண்டில் இதன் நஷ்டம் 10.6பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் 4.8பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது.
அமெரிக்காவில் அடியை வாங்கிக் கொண்டிருந்தாலும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியநாடுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் நம்பர் ஒன் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், 2வது நிறுவனமானஃபோர்டு ஆகியவற்றை விற்பனைரீதியில் விழுங்கி வரும் ஜப்பானின் டொயட்டோநிறுவனத்தின் அசைவுகளை உலக மோட்டார் வாகன நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
