ஜேப்பியார் வீடு, கல்லூரியிலும் சோதனை
Subscribe to Oneindia Tamil
![]() |
சென்னை:ஜேப்பியார், கனகராஜ் உள்பட சென்னையில் புற நகர் பகுதிகளில் தனியார் பொறியியல் கல்லூரிகள்நடத்துவோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
விஜய்காந்தின் வீட்டில் சோதனை நடக்கும் அதே நேரத்தில் இந்த சோதனைகள் நடந்தன.
பழைய மகாபலிபுரம் சாலையில் நீலாங்கரையில் சத்யபாமா பொறியியல் கல்லூரிநடத்தி வரும் முன்னாள் அதிமுக மந்திரி ஜேப்பியாரின் வீட்டிலும், கல்லூரியிலும்வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் திருநின்றவூரில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும்கனகராஜ் வீட்டிலும் தோதனை நடந்தது.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை வீட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் சேர்ந்த நடிகர் முரளிவீட்டிலும் சோதனை நடந்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை.













Click it and Unblock the Notifications