15 வயதில் கள்ள காதல்-மகளை கொன்ற தந்தை
சென்னை:சென்னையில் திருமணமான ஒருவரைக் காதலித்த 15 வயது மகளை கொன்றார் தந்தை.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், அடையாற்றின் கரையில், பாதி எரிந்த நிலையில் கிடந்த 15 வயதுப் பெண்ணின் பிணத்தை அப்பகுதியினர் பார்த்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தியபோது காணு நகர், சாஸ்திரி தெருவைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகள் வரலட்சுமி தான் என்பது தெ>யவந்தது.
இதையடுத்து குப்புசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, மகள் வரலட்சுமியை தானே கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வரலட்சுமி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பார்க்க அழகாக இருந்த வரலட்சுமிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபர் காதல் வலை வீசியுள்ளார். அதில் வரலட்சுமியும் சிக்கினார்.
இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி காதலை வளர்த்துள்ளனர். தனிமையிலும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இது அக்கம் பக்கத்தினர் மூலம் தனக்குத் தெரிய வரவே குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இனிமேல் பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் வரலட்சுமி தனது பழக்கத்தை விடவில்லை.
தான் சொல்லியும் கேட்காமல் இப்படிக் கள்ளக் காதல் செய்கிறாளே என்ற கோபத்தில் வரலட்சுமியை இன்று காலை அடையாற்றுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை அடித்தே கொன்றுள்ளார் குப்புசாமி. பின்னர் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.
இந்த குற்றத்தை குப்புசாமியே ஒப்புக் கொண்டுவிட்டார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையேஅடித்துக் கொன்று, எரித்த அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications