இனி நடந்துக்கிட்டே டி.வி. பார்க்கலாம்
டெல்லி:டிவி பார்க்கும் வசதியுடன் கூடிய செல் போன்களை நோக்கியா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது
நோக்கியா நிறுவனம் தனது செல்போன்களில் டிவி பார்க்கும் வசதியைப் புகுத்தி சிறிது காலம் ஆகிறது. இந்த வகை செல்போன்கள் இப்போதுஇந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வந்து சக்கை போடு போட்டு வருகிறது.
தற்போது இந்த வகை டிவி செல்போன்களை இந்தியாவுக்கும் கொண்டு வரவுள்ளது நோக்கியா. இதுகுறித்து நோக்கியா நிறுவனத்திற்கான ஆசியாபசிபிக் பிராந்திய. தலைவர் பவன் காந்தி கூறுகையில், இதுதொடர்பாக தூர்தர்ஷனுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இதன் மூலம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எங்களது டிவி வசதியுடன் கூடிய செல்போன்களில்கண்டுகளிக்க முடியும். இதுதொடர்பான பரீட்சார்த்த ஒளிபரப்பை தூர்தர்ஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது.
தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக நாங்கள் காத்துள்ளோம். கிடைத்தவுடன் விற்பனைக்கு இந்த வகை செல்போன்கள் வரும்.
நோக்கிாய என்92 வகை செல்போன்களில் இந்த டிவி பார்க்கும் வசதியுடன் கூடிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு அந்த செல்போன்கள்விற்பனைக்கு வரும்.
இந்த வகை செல்போன்கள் வியட்நாமில் 500 முதல் 600 டாலர்கள் வரை விற்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலையை இப்போதே சொல்லமுடியாது.
இருப்பினும் தென்னிந்தியாவில்தான் அதிக அளவில் செல்போன் வாடிக்கையாளர்கள் இருப்பதால் அப்பகுதியினருக்கு அசவுகரியத்தைஏற்படுத்தாத வகையில் விலை இருக்கும்.
ஆரம்பத்தில், இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த டிவியுடன் கூடிய செல்போன்கள் செயல்படும். அதன் பின்னர் படிப்படியாகஇந்தியா முழுவதும் இதை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை செல்போன்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அங்கு இது பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த டிவி செல்போனில், 20 மணி நேரத்திற்குக் இசையைக் கேட்கக் கூடிய வசதி, நான்கு மணி நேரம் பேசக் கூடிய வசதி, ஒரு மணி நேரம் வரைபதிவு செய்யக் கூடிய வகையிலான வீடியோ கேமரா வசதி, நான்கு மணி நேரம் தொடர்ந்து டிவி பார்க்கக் கூடிய வசதி இருக்கும் என்றார் காந்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications