ஒரு பாட்டி, கனவில் சிவாஜி, கருணாநிதி!
சென்னை:சிவாஜி கணேசன் கனவில் வந்தார் என்று கூறி முதல்வர் கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்த பாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார். வீடு உள்ள தெருவுக்கு இரண்டு தெருக்கள் முன்பாகபாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்தப் பாட்டியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவரது பெயர் வசந்தா (வயது 60). திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவர். சென்னையில் தனது 2 குழந்தைகளுடன் ஓட்டேரிநம்மாழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார்.
தனது கனவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்ததாகவும், அப்போது ஒரு கதையைக் கூறி, அதில் பிரபுவை நடிக்க வை என்று கூறியதாகவும்,பிரபுவின் கால்ஷீட் வாங்கித் தர உதவுமாறு முதல்வரை பார்க்க வந்ததாகவும் வசந்தா கூறியதால் போலீஸார் குழப்பமடைந்தனர்.
அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். பின்னர் அப்பெண்மணியை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர்கள் வசந்தாவின் வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications