திமுக, தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் திமுக, தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அக் கட்சியின் சார்பில்கடந்த முறை கவுன்சிலர்களாக இருந்து ராஜினாமா செய்த அதே வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர்.
அவர்களின் விவரம்:
வார்டு 2-ஆர்.டி.சேகர், 4-எம்.எம்.சாமி, 6-சின்னப் பொண்ணு, 8-ரவி என்கிற டன்லப் ரவி, 9-புனிதவள்ளி, 12-முத்துக்கிருஷ்ணன், 14-ரேவதிஞானசேகர், 18-ஸ்ரீதர், 22-சுரேஷ், 23-மா.ஜெய்சங்கர், 26-சுபாஷ் சந்திரபோஸ், 35-மா.நெடுமாறன், 37-துரைராஜ், 40-கன்னியப்பன்,54-நாகராஜன், 56-நிர்மலா சீனிவாசன், 57-காஞ்சி துரை, 59-நா.சேகர், 61-முகம்மது யாசின், 63-மோகன், 65-இளங்கோவன், 66-புஷ்பலதா,68-வசந்தி, 69-வசந்தி பாய், 71-சிவலிங்கம், 74-டி.ரமேஷ், 76-சுமதி, 77-திராவிட நாடு முனுசாமி.
79-அஞ்சலி தேவி, 81-மதன் மோகன், 82-பிரபாகரன், 84-மதிவாணன், 86-சுரேஷ்குமார், 91-தீபா, 92-லலிதா, 95-ஆர்.துரை, 110-லில்லிசமாதானம் என்கிற ரோசி, 111-செல்வி சுனில், 113-அன்புதுரை, 119-ராஜம்மாள், 122-கோ.சு.மணி, 126-ஏழுமலை, 127-ஜெ.கருணாநிதி,129-சுப.முத்துவேல், 130-தனசேகரன்.
133-கவிதா, 135-காஞ்சனா, 138-மேரி லூர்துசாமி, 139-மகேஷ்குமார், 140-மா.சுப்ரமணியன், 141-கென்னடி, 143-சி.குப்பன், 147-அன்பழகன்,153-கிஷாகுமாரி மதிவாணன்.
தேமுதிக:
தேமுதிக சார்பில் போட்டியிடும் 95 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறும் 100 வார்டுகளிலும் தேமுதிக போட்டியிடும் என ஏற்கனவே விஜயகாந்த் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று தனதுகட்சியின் 95 வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார்.
வேட்பாளர்களுக்கு அந்தந்த பகுதி, வார்டு, கிளை, நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறாமல் தனித்தே போட்டியிடவுள்ளது. கடந்த மாநகராட்சித்தேர்தலின்போது இரு தரப்புக்கும் இடப் பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் மார்க்சிஸ்ட் தனித்தே போட்டியிட்டது. இந் நிலையில் இம் முறைமீண்டும் கூட்டணியில் இடம் பெற மார்க்சிஸ்ட் முயன்றது.
ஆனால் இம்முறையும் கூட்டணி உருவாகவில்லை. இதையடுத்து தனது கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட்அறிவித்துள்ளது. அதன்படி 69வது வார்டில் சரஸ்வதி, 130வது வார்டில் அழகு, 142வது வார்டில் சரோஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications