கருணாநிதி இன்று டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திட்டக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.

தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திட்டக் குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதிதலைமையில் தமிழக குழு கலந்து கொள்ளவுள்ளது.

இதற்காக இன்று மாலை விமானம் மூலம் கருணாநிதி டெல்லி செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு திட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர்பங்கேற்கிறார். அப்போது தமிழகத்தின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறுஅவர் கோரிக்கை விடுப்பார்.

அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் சென்னைதிரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+