கர்நாடக அரசுக்கு திமுக முழு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை முழுமையாகஆதரிப்பதாக கர்நாடக மாநில திமுக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கர்நாடக மாநில திமுக செயலாளர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் காலம் காலமாகவாழ்ந்து வருகிறார்கள். இம்மாநில நலன்தான் கர்நாடகத் தமிழர்களின் நலனும் ஆகும்.

எனவே கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த நலன் கருதி, காவிரி இறுதித் தீர்ப்பு குரித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கர்நாடக மாநில திமுக முழுமையாக ஆதரவளிக்கும், ஒத்துழைப்பு தரும்.

தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல, கன்னட மக்களும், தமிழ் மக்களும் பந்துக்குள்காவே இருக்க விரும்புகிறோம் என்று கிள்ளிவளவன்தெரிவித்திருந்தார்.

பந்த்துக்கு தமிழ்ச் சங்கம் ஆதரவு:

இதேபோல 12ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக பந்த்தில், தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1991ம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புவெளியானபோது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. முன்பு கலவரம் ஏற்பட்ட தமிழர் வாழும் பகுதிகளில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில்10 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விழிப்புணர்வு பற்றி தமிழர்களிடையேயும், பாதுகாப்புகள்குறித்தும் போலீஸாருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

நந்தினி லே அவுட், காவேரி நகர், கண்டீரவா நகர், கமலா நகர், காமாட்சிபாளையம், லக்கேரி, லட்சுமிதேவி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில்பொதுமக்களைச் சந்தித்து தமிழ்ச் சங்கக் குழுவினர் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு இதுதான் சொந்த மண். எனவே நாம் கன்னட மக்களுக்கோ, கன்னட மொழிக்கோ ஒருபோதும் எதிரிகள்அல்லர்.

எனவே பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் பந்த்தில் கர்நாடகத் தமிழர்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்சண்முகசுந்தரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+